உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

கட்டில் பேசுகிறது கவர்ன்மெண்டு ஆஸ்பத்திரியில், அந்தக் கிழக்கு வார்டுப் படுக்கையில், எனது வியாதிக்கு என்னமோ ஒரு முழநீளலத்தின் பெயர் கொடுத்து, என்னைக் கொண்டு போய்க் கிடத்தினார்கள். எனது இரண்டு பக்கங்களிலும், என்னைப் போல் பல நோயாளிகள். முக்கலும் முனங்கலும் நரகத்தின் உதா ரணம் மாதிரி. ஒவ்வொரு கட்டிலின் பக்கத்திலும் மருந்தையும் கஞ்சி யையும் வைக்க ஒரு சிறு அலமாரி. கட்டில் கம்பியில், டாக்டரின் வெற்றி, அல்லது வியாதியின் வெற்றி இரண்டி லொன்றைக் காண்பிக்கும் 'சார்ட்' என்ற படம். ஹாலின் மத்தியில் ஒரு மின்சார விளக்கு; தூங்கும் பொழுது கண்களை உறுத்தாதபடி அதற்கு மங்கலான ஒரு 'டோம்.' அதன் கீழ் வெள்ளை வர்ணம் பூசிய ஒரு மேஜை நாற்காலி. அதில் வெள்ளுடை தரித்து, ஆஸ்பத்திரி முக்கா' டிட்ட ஒரு நர்ஸ் என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறாள். ஒன்றையும் பற்றாமல் சலித்துக் கொண்டிருக்கும் மனம். ஐயோ! மறுபடியும் அந்த வயிற்று வலி. குடலையே பிய்த்துக்கொண்டு வந்துவிடும் போலிருக்கிறதே! ஒரு கையால் வயிற்றை அமுக்கிக்கொண்டு ஒரு புறமாகத் திரும்பிப் படுத்தேன். சீ! 'ஸ்பிரிங்' கட்டிலாம்! என்ன மாக உறுத்துகிறது? சற்று அயர்வு......