உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179

சங்குத் தேவனின் தர்மம் முறுக்குப் பாட்டி முத்தாச்சி யென்றால் சிறு குழந்தை களுக்குத்தான் தெரியும். அவள் நாவல் உலகில் காணப் படும் மனித உருவங்கள் போல், முறுக்கு விற்ற பணத்தி னாலோ, ரங்கூனிலிருந்து திடீரெனத் தோன்றும் தமயனின் ஐசுவரியத்தினாலோ, கோடீசுவரி யாகிவிடவில்லை. வறுமை யில் குசேலரின் தமக்கை சமய குரவர்கள் இயற்றும் அற்புதங்கள் என்ற செப்பிடுவித்தைகள் நடவாத இந்தக் காலத்தில். அவள் தினந் தினம் காலந்தள்ளுவது மல்லாமல் தனது ஒரே குமாரத்திக்கு விவாகம் செய்யவும் ஆரம்பித்தது தான் அற்புதத்திலும் அற்புதம். நமது ஹிந்து சமூகத்தின் பழைய உலர்ந்து போன கட்டுப்பாடுகளின் கைதிகளாக ஏழைகள்தாம் தற்போது இருந்துவருகிறார்கள். ஏழ்மை நிலைமையிலிருக்கும் பெண்கள் கொஞ்சக் காலமாவது கன்னிகையாக இருந்து காலந்தள்ள ஹிந்து சமூகம் இடந்தராது. இவ்விஷயத்தில் கைம் பெண்களின் நிலைமையைவிடக் கன்னியர்கள் நிலை பரிதாபகரமானது. மிஞ்சினால் விதவையை அவமதிப் பார்கள்; ஆனால் ஒரு கன்னிகையோ வெனின்,அவதூறு, உலகத்தின் நிஷ்டூரம் என்ற சிலுவையில் அறையப்படு வாள். பணக்காரர்களான பூலோகத் தெய்வங்களின் மீது சமுதாயக் கட்டுப்பாட்டின் ஜம்பம் பலிக்காது. இவ்வளவும் முத்தாச்சிக்குத் தெரியாது. ஆனால் எப்படியோ வின்டில் (windle) துரை பங்களாவில் பங்கா இழுக்கும் மாடசாமி பிள்ளைக்குத் தன் மகளைக் கொடுக்க நிச்சயித்துவிட்டாள். நாளைக் காலையில் கலியாணம். சாயங்காலம் ஐந்தரை மணி யிருக்கும். முறுக்குப் பாட்டி தங்கவேலு ஆசாரியின் வீட்டுத் திண்ணையில்,