உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

180 புதுமைப்பித்தன் கதைகள் சுவரருகில் சாய்ந்து, காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறாள். செம்பாதி நரைத்த தலை, ஜீவியத்தில் பட்ட கஷ்டங்களைப் படம் (Graph) போட்டுக் காட்டுவதுபோல் கோடுகள் நிறைந்த முகம், பாம்படமில்லாது புடலங்காய்த் துண்டு கள் மாதிரித் தொங்கும் காதுகள், 'இந்திரன் கலையாய் என் மருங்கிருந்தான்' எனக் காணப்படும் சம்பிரதாயமாய்ப் புடவை என்ற இரண்டு வெள்ளைத் துண்டுகள் (ஒரு காலத்தில் வெள்ளையா யிருந்தவை) இவள் பணக்காரி யல்லள் என்பதை இடித்துக் கூறின. கையிலிருந்த உலர்ந்த வெற்றிலையை வாயில் போட்டுக்கொண்டு, அதற்குத் துணையாக ஒரு நீளத் துண்டுக் கருப்பட்டிப் புகையிலையையும் உள்ளே செலுத்தி, கைகளைத் திண்ணை யில் துடைத்துவிட்டு, "ஆசாரியாரே! என்ன? வேலையெ சுருக்கா முடியும். மோசம் பண்ணிப்பிடாதிரும்!" என்றாள். . 'ஆச்சி/ பயப்படாதே, பொழுது சாயிரத்துக்கு மின்னெ ஒன் வேலெ முடிஞ்சிடும்!' என்று. தன் கையி லிருந்த பாம்படத்திற்கு மெருகிட்டுக்கொண்டே. தேற்றி னான் தங்கவேலு ஆசாரி. போன மூன்று மாத காலமாக மாதாந்தரம் நடந்து, அன்று விடியற்காலை முதல் உண்ணா விரதமிருந்த முறுக்குப் பாட்டிக்கு இது ஆறுதலளித் ததோ என்னவோ,- ஒரு பெருமூச்சுத்தான் வந்தது. பிறகு சில நிமிஷங் கழித்து, புன்னகையுடன், "நான் கைலாசவரத்துக்குப் போகணும், வழி காட்டுப் பாதை, இன்னம் நான் போய்த்தான் மேலே வேலையைப் பார்க்க ணும். எல்லாம் அப்படி அப்படியே கெடக்கு" என்று பின்னும் துரிதப்படுத்தினாள். "ஒன் வேலெ அண்ணைக்கே முடிஞ்சிடும். அந்தச் சிறுகுளம் சுப்பையர் வேலை வராட்டா. அவர்தான் விடேன் தொடேனுன்னு அலைஞ்சு சாமானை நேத்துத்தான் வாங்கிக்கிட்டுப் போனார். இல்லாட்டா இதென்ன பெரிய காரியமா? அது சரிதான் இருக்கட்டும் ஒரு நொடிலே ஆச்சி. ஒன் வீட்டிலே இதுதானே முதல் கலியாணம்.

  • பாம்படம் என்பது திருநெல்வேலி ஜில்லாவில் பெண்கள்

காதில் அணியும் ஓர் ஆபரணம்.