உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181

சங்குத் தேவனின் தர்மம் 181 செலவு என்ன ஆகும்?" என்று பேச்சை யிழுத்தான் ஆசாரி. "என்னமோ, எனெக்கு ஏத்தாப்பிலே. சேந்து ரெண்டு நூறு ஆகும்" என்றாள். எல்லாஞ் "நகை எம்பிட்டு?" என்று மீண்டும் பேச்சைப் பெருக் கினான் ஆசாரி. "எல்லாமென்ன. அந்த எங்க வீட்டுக்காரர் போனாரே அவர் போட்டதுதான். என்ன, ரெண்டு மோருதம், இப்பொ நீர் அழிச்சுப் பண்ணற ஒரு சோடு பாம்படம், வேறு செலவு என்ன. ஒரு அம்பது. அது கெடக்கட்டும். வேலெ என்ன இப்பொ முடியுமா?" என்று மீண்டும் ஒரு முறை கேட்டாள். "இதோ ! நீ தான் பாத்துக் கொண்டிருக்கயே! எங் கைக்கிச் செறகா கட்டியிருக்குது? வேலையெ ஓட்டத்தான் செய்யிரேன். அவசரப்படாதே...நீ இந்த சமுசாரத்தைக் கேட்டியா? ஊருலெ களவுங் கிளவுமா யிருக்கே? அண் ணைக்கி நம்ப மேலப் பண்ணை வீட்டிலெ 2000-த்துக்குக் களவாம்! காசுக் கடை செட்டியாரு பத்தமடைக்கிப் போயிட்டு, வட்டிப் பணத்தை மடிலெ முடிஞ்சிக்கிட்டு வந்தாராம்; மேலெப் பரம்பு கிட்ட வாரப்போ,பொளுது பல பல இண்ணு விடியராப்பலே, வந்து தட்டிப் பறிச்சுக் கிட்டுப் போயிட்டான்! செட்டியாரு வயித்திலே அடிச்சுக் கிட்டு வந்தாரு. காலங் கெட்டுப் போச்சு! இதெல்லாம் நம்ம கட்டப்ப ராசா காலத்துலெ நடக்குமா?" என்றான் ஆசாரி. "இம்பிட்டுஞ் சேசுபிட்டுப் போனானே அவனாரு?' என்றாள் கிழவி. "அவன் தான், நம்ம சங்குத் தேவன். எல்லாம் இந்தக் கும்பினியான் வந்த பிறவுதான்! ஊர்க்காவலா எளவா? எல்லாம் தொலைந்து போயுட்டதே!" "சவத்தெ தள்ளும்.எம் பாவத்துலே வந்து விழாமே இந்த மூங்கிலடியானும் பேராச்சித் தாயுந்தான் காப்பாத்த என்ன,ஆச்சா?" . ம் 12