உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

182 புதுமைப்பித்தன் கதைகள் இரு, இரு, ஒரு நொடி. இதெ மாத்ரம் ராவித் தாரேன்" என்று சொல்லி, ராவப்பட்ட பாம்படத்தையும். தங்கப் பொடியையும் இரண்டு சிவப்புக் காகிதங்களில் மடித்து மரியாதையாகக் கொடுத்தான். முத்தாச்சியும் மடியிலிருந்த முடிப்பை யவிழ்த்து ஒரு கும்பினி ரூபாயை வைக்க, "என்ன! ஒனக்காக இண்ணக்கி முச்சோடும் கஞ்சி குடியாமெ பண்ணித்தர, நல்ல வேலெ செஞ்சை!" கூடக் என்றான். "என்னெத்தான் தெரியுமே,ஏழெக்கி..." .. அப்படின்னா தொள்ளாளிக்குக் கூலி குடாம முடி யுமா?' என, அவனுடன் வாதாட நேரமில்லையென்று கருதிக் கேட்டதைக் கொடுத்து விட்டு, நகையைப் பத்திர மாக முடிந்து இடுப்பில் சொருகிக்கொண்டு, வெகு வேக மாய்க் காலாழ்வானைத் தட்டிவிட்டாள் கிழவி. II எவ்வளவு வேகமாக நடந்தாலும், மனித உடல் என்ன மோட்டார் வண்டியா? அதிலும் ஒரு கிழவி! கவிஞர் வெகு உற்சாகமாக வருணிக்கும் 'அந்தி மாலை' போய், இரவு துரிதமாக வந்தது. கிழவி போகும் பாதை ராஜபாதை யானாலும், அக்காலத்தில், ஜனநடமாட்டமேயில்லாமல், மரங்கள் அடர்ந்து நெருங்கிய காட்டுப் பாதை. இருள் பரவ ஆரம்பித்தது என்றால் - வெகுவாக அர்த்த புஷ்டி யுடைய வார்த்தைகள் அல்ல--கிழவி கூறிய மாதிரி தன் கை தெரியாத கும்மிருட்டு.' கிழவி இதுவரை பேய்க்கும் பயப்பட்டவள் அல்லள், திருடருக்கும் பயப்பட்டவள் அல்லள். ஆனால் இன்று ஒவ்வொரு மரத்தடியிலும் ஒவ்வொரு சங்குத் தேவன்! மரக் கிளைகள்மீது குதிக்கும் தருவாயில் பதுங்கி யிருக் கும் சங்குத் தேவன்! இவ்வாறு ஒவ்வொரு மரத்தைத் தாண்டுவதும் ஒரு வெற்றியாக. தனது மனவுலகில் தோன்றும் சங்குத் தேவர்களிடம் தப்பித்துக் கொண்டே செல்கிறாள்.