உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183

சங்குத் தேவனின் தர்மம் 183 இப்படி அவள் தவித்துத் தவித்துச் செல்லும் பொழுது, தனக்கு முன் சிறிது தூரத்தில் ஓர் இருண்ட கரிய உருவம் தோன்றலாயிற்று. கிழவியின் வாய் அவளை யறியாமலே."சங்குத்தேவன்!" என்று குழறிற்று. கால் கைகள் வெடவெடவென்று நடுங்கின. முன் அடியெடுத்து வைக்க முடியவில்லை. மடியை இன்னொரு முறை இறுக்கிச் சொருகிக்கொண்டு, "ஏ, மூங்கிலடியான்! நீதான் என்னைக் காப்பாத்தணும்?" என்று ஏங்கினாள். அந்தக் கரிய உருவம் தான் போகும் திசையில் இருளில் மறைவதைக் கண்டவுடன், அதுவும் தன்னைப் போன்ற பாதசாரியாக இருக்கலாம் என்று நினைத்தாள். மூங்கிலடியான் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, "அதாரது? ஐயா! ஐயா!" என்று கூவிக்கொண்டே நடக்கலானாள். "யாரங்கே கூப்பாடு போடுவது?" என்ற கனத்த ஆண் குரல் இருளோடு வந்தது. சித்தெ பொறுத்துக்கும், இதோ வந்தேன்" என்று நெருங்கினாள். தலையில் பெருத்த முண்டாசு, நீண்ட கிருதா, வரிந்து கட்டின அரைவேஷ்டி. திடகாத்திரமான சரீரம், அக்குளில் ஒரு குறுந்தடி,-இவ்வளவும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய வாரம்பித்தன. சரீர ஆகிருதியைப் பார்த்ததும் கிழவிக்குப் பெரிய ஆறுதல்.-இனிக் கவலை வீடுபோய்ச் சேரலாம் என்ற நம்பிக்கையினால். யில்லாமல் "ஏ கெழவி! இந்தக்கும்மிருட்டிலே நீ எங்கே கெடந்து வாரெ?" என்றான் அந்த அந்நியன். நான் இங்கனெ இருந்துதான். எம்பிட்டுப் பறந்து பறந்து வந்தாலும் கெழவிதானே!பொளுது சாஞ்சி எத் தினி நாளியிருக்கும்? நான் போயித்தானே கொறவேலே யும் முடியணும், நாழி ரொம்ப ஆயிருக்குமா?' என்று கேட்டுக்கொண்டே பின் தொடர்ந்தாள். பொழுதா? நேரம் ஒண்ணுமாகல்லெ! நீ எங்கே போரே?" என்றான் துணை நடந்த பாதசாரி. "நான் எங்கே போனா என்ன? ஓங்க பச்சேரிலே ஒரு பள்ளனே பார்க்கணும், அதுதான்!"