உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்கம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50


________________

50 செய்தாலும் தமது தாழ்ந்த பிறப்பின் நிமித்தம், கடவுளால் அருளப்பட்ட சுதந்திரத்தை அடைவதும் தடைப்பட்டு, மேம்பாடு அடைவதற்கு இயலாமல் போகின்றார்." இவ்வாறு கூறியவரின் வழியினரான பி.டி. ராசன் நீதிக்கட்சி ஆட்சியில் அமைச்சராக இருந்தவர், அவர் மதுரை மீனாட்சி கோயில் குடமுழுக்குக் குழுவுக்குத் தலைமை ஏற்று நடத்தியவர். சங்கராச்சாரியாராலே ஒரு பொற்சங்கிலி அணிவிக்கப்பட்டு வாழ்த்தப்பட்டவர். அவருடைய கொள்கையும் அதுவே. இந்துக்களில் பிரம்ம, சத்திரிய, வைசிய, சூத்திரர் என்ற நான்கு வகுப்பும் பிரும்மாவின் படைப்பு என்று கூறும் பிராமணர்களிலேயே சிலர் இந்த நால்வகுப்பு இன்று உள்ளதென்று ஒத்துக்கொள்வதில்லை. "பிராமணர், வைசியர், சத்திரியர், சூத்திரர் என்ற நால்வகுப்பில், சத்திரியர் அனைவரும் அவதாரமான பரசுராமரால் அழிக்கப்பட்டு விட்டனர் என்பர்." அவதாரம் என்றால் தெய்வம் மனிதனாகக் கீழ் இறங்குவது என்றும் தருமத்தைக் காக்க வந்தது என்றும் பொருள். சத்திரியர்கள் அனைவரையும் அவதார புருடர் அழித்தார். "வைசியர் என்பது ஒரு வருணமாக (சாதிமுறைப்படி) இப்போது இல்லாமல் போயிருப்பதால், இந்தியாவில் தற்காலத்தில் பிராமணர், சூத்திரர் என்னும் இரண்டு வகுப்பினரே இருக்கிறார்கள் என்பது அந்தப் பிராமணர்களுடைய கொள்கையாகும்." பிராமணர்கள் உட்பட எல்லோருமே பிறக்கும் போது சூத்திரரே என்பது ஒரு கொள்கை. அப்படிப் பிறந்தவர்களுக்குப் பூணூல் அணிவித்து இரு பிறப்பாளர் ஆக்கும் போதே அவரவர் தொழிலின்படி பிராமண சத்திரிய வைசியர் ஆகின்றனர் என்பது அக் கொள்கை. எனவே, பிராமணன் பிறப்பதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.