57
________________
57 அழைத்துக் கேட்கிறார். அவன் சொன்னான், "நீங்கள் கற்றுத் தரமாட்டேன் என்று மறுத்ததால், நான் உங்களைப் போலச் சிலை ஒன்றைச் செய்து வைத்து, தினம் அதை வழிபட்டு வில்வித்தையைக் கற்றுக் கொண்டேன்!" என்று. அப்படிப் பயின்று அந்த ஆற்றலைப் பெற்றதாக அவன் சொன்னதைக் கேட்டுத் துரோணர் மகிழவில்லை. அவன் குருவாகக் கொண்டு வழிபட்ட அந்தத் துரோணாச் சாரியாராலேயே அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. "இதை என்னிடமிருந்து கற்றுக் கொண்டதற்கு எனக்குக் காணிக்கை தரவேண்டும்" என்று கேட்கிறார். "நான் என்ன காணிக்கை தரவேண்டும்?" என்று வேடன் கேட்டான். "எந்த விரல் கொண்டு நீ கற்றுக் கொண்டாயோ அந்தக் கட்டை விரலை எனக்கு வெட்டிக் கொடு" என்றார் துரோணாச்சாரியார். துரோணர் கேட்டதை மறுக்காமல் ஏகலைவன் தன் கட்டைவிரலை உடனடியாக வெட்டிக் கொடுத்தான். இதுதான் அந்த நாள் மனு தருமம்! ஆனால், தேசியக்கவி பாரதியார் போன்ற முற்போக்குச் சிந்தனையாளர்கள் இதைக் குறித்து வருத்தப்பட்டிருக் கிறார்கள். பண்டித சவகர்லால் நேரு ஒரிசாவுக்குச் சென்றபோது அந்தக் கதையைக் கூறி ஒருவர் குறைபட்ட போது, "அது அந்தக் காலத்து மரபு. இந்தக் காலத்தில் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்" என்றார். பிராமணன் தான் குருவாக இருக்கலாம்; மற்ற சாதிக்காரர்களுக்கு, குறிப்பாகச் சூத்திரர்களுக்கு எதையும் கற்றுத் தரக்கூடாது என்பது வருண தருமம். தான் கற்றுக் கொடுக்காமலேயே தானாகக் கற்றுக் கொண்ட ஏகலைவனிடம் கட்டை விரலையே காணிக்கையாகத் துரோணாச்சாரியார் கேட்டார்; அவனும் கொடுத்தான் என்பது பழைய செய்தி. அறிஞர் அண்ணா இதைப்பற்றி ஒருமுறை பேசியபோது சொன்னார், "ஏகலைவன் தனது கட்டை விரலை வெட்டிக் கொடுத்ததன் மூலம் எவ்வளவு பெரிய உண்மை நாட்டு மக்களுக்குத் 4.தி.இ.405