உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

[கவலையுடன் உலாவுகிறான் வாலிபன். அவன் நிலை கண்டு மதி ஆச்சரிய மடைகிறான். வாலிபன் மதியைக் கோபமாகப் பார்க்கிறான் ஒரு கணம். மதி பாசத்துடன் பார்க்கக் கண்டு வாலிபனின் கோபம் தானாகத் தணிகிறது]—

வாலிபன்: என்ன செய்வதென்றே தெரியவில்லையே! என்னைப் போகவிட மாட்டீர்கள்?

மதி: ஊ ஹூம்!

வாலி: (பூமியில் காலைக் குழந்தைபோல உதைத்துக் கொண்டு...என்ன சங்கடம் இது! இதைக் கேளுங்கள்—நான்—நான்.

[தயக்கம் மேலிடுகிறது.]

மதி: என்ன? சொல்லு...

வாலிபன்: ஒன்றுமில்லை. பலரை நான் பரதவிக்கச் செய்திருக்கிறேன். இப்போது நான் சிக்கிக்கொண்டு தவிக்கிறேன். பெண் புத்திதான் பின் புத்தி என்பார்கள்.—உம்—என் புத்தியுமா அப்படி இருக்கவேண்டும்...

[வாலிபன் பலகணி வழியாக வெளிப்புறத்தைப் பார்க்கிறான். மதிவாணன் பின்புறம் சென்று வாலிபன் தோளின் மேல் தன் கரத்தை வைக்க, வாலிபன் பதறுகிறான். மதிவாணன் அரும்புமீசையுள்ள ஆணழகாகண்வளராய்! கரும்பு மொழி பேசும் என் கட்டழகா கண்வளராய் எனப் பாடுகிறான். பிறகு வாலிபனது கட்டிலருகே செல்ல அவன் திடுக்கிடுகிறான்.

மதி: வீராதி வீரன்போல் பேசுகிறாய். ஏன் திகில்?

வாலி: ஒன்றுமில்லை! போய்ப்படுத்துக் கொள்ளுங்கள்.

மதி: (சட்டையைக் களைந்தபடி) தம்பீ! மேலங்கி தலையணி, இவைகளைக் களைந்து விட்டுப் படுத்து உறங்கு–கொடு மேலங்கியை.

வாலி: (மேலும் திகைத்து) வேண்டாம்...வேண்டாம்...

[மதி, வாலிபனின் அருகே சென்று, அவனது மேலங்கியைக்களைய முற்பட, வாலியன் பதறி மதிவாணனின் கைகளை உதறியபடி.]
3