உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

பெண்: (குமாரி பேசும் பாவனையில்) "கேள். கொடுக்கப்படும். ஆனால் முறையும் நெறியும் அறிந்து கேள்" (சொந்த முறையில் பேச்சு) என்று எங்கள் அரசி கூறுவார்கள். ஏனென்றால் சில விஷமக்காரர்கள் ராஜ்யத்தில் பாதியும், அரச குமாரியும் வேண்டும் என்று கூடக் கேட்டு விடுவார்களல்லவா?

மதி: எனக்கு ஏன் புதிதாக ஒரு ராஜ்யம்? என் காதல் ராஜ்யத்திற்கு ராணியாக இருக்கும்படி தங்கதைத் தரவேண்டும்—நான் விரும்பும் பரிசு அதுதான் என்று கூறுவேன்.

பெண்: நான் வெட்கத்தால் தலை குனிந்துகொண்டு நிற்பேன்.

மதி: வெற்றி வீரனான நான், நான் விரும்பும் பரிசு பெற்று வீடு செல்வேன்.

பெண்: வீடு சென்று என்னைத் திலகாவிடம் தருவீர்கள்.

மதி: என் அம்மா, உன்னைக் கண்டதும்...

பெண்: கண்டதும்...

மதி: (தாயார் பேசுவதுபோல) வாடி என் கண்ணே என்று அன்புடன் கூறி..(அவள் கரங்களைப் பிடித்து இழுத்து அணைத்துக்கொள்ளும் நிலையில்...) அணைத்துக் கொண்டு, உச்சி மோந்து முத்த மிடுவார்கள்.

பெண்: அந்த நாள் தான், திருநாள்!

மதி: வாழ்விலோர் திருநாள்—

பெண்:—(தயக்கத்துடன) இனியும் இருப்பது முறையல்ல.

மதி: போகத்தான் வேண்டுமா, தங்கம்!

பெண்: கடமை! தவிர்க்க முடியாத கடமை!

மதி: சரி! பணியத்தான வேண்டும் பாகு மொழியாளே! நாளை மாலை...

பெண்: நாளை மாலையும் இன்னும் நாலு நாட்களும் நான் இந்த இன்பத்தைப் பெறமுடியாது. அரண்மனையிலே வேலை!