46
விநாடி தன் ஆவலை வெளிப்படுத்தும் விழியுடன் காணப்படுகிறாள்—மறுகணம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறாள்......அமைச்சர் பரிசுப் பட்டயத்தை அரசியின் முன் காட்ட, அரசி அதிலே தன் கையொப்பத்தைப் பொறித்து விட்டு, பட்டயத்தைப் பெற்றுக் கொள்ளும்படி மதிவாணனை அழைக்கிறாள் தன் புன்னகையால்.
சொக்கிய நிலையிலிருந்து மாறாதவனான் மதிவாணன் அரசி அருகே சென்று பட்டயத்தைப் பெற்றுக்கொண்டு மீண்டும் வணக்கம் செலுத்திவிட்டு நிற்கிறான்—
இருவரின் விழிகளும் சந்திக்கின்றன. நிலைமையைச் சரிப்படுத்த தீர்மானித்து அரசி]அரசி: மதிவாணரே! அரசிகளைக் கண்டதே கிடையாதோ—இதற்கு முன்பு எப்போதும்?
மதி: (பூரிப்புடன்) கண்டதில்லை...தங்கள் போன்ற தங்க குணம் படைத்த அரசிகளைக் கண்டதில்லை—
குமாரி: கலை வாணரே! உமது கலைத் திறமையைக் கண்டு இந்நாடு களிப்படைகிறது.
மதி: புது மனிதனானேன். பாராட்டும் பரிசும் பெற்றதால்—
குமாரி: எமது விருந்தினராக சில நாட்கள் இருக்க...
மதி: உத்திரவு மகாராணி!
குமாரி: அன்பழைப்பை, மறுக்கமாட்டீர்!
மதி: முடியுமா அரசியாரே!