உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

மதி: சட்டத்தைவிட சம்பிரதாயம் பலம் பொருந்தியது தங்கமே!

மதிவாணன், குமாரி தர்க்கப் பாட்டு

குமாரி:

மாவொடு தழுவும் மலர்க்கொடிபோலே
மாதுதான் மருவ முடியாதோ?
         மாது நான் மருவமுடியாதோ?

மதி:

மாதுன்னால் முடியும் ஆனாலும் மாண்பெனும்
மணிமுடி தடையுண்டு தெரியாதோ!
மணிமுடி தடையுண்டு தெரியாதோ!

குமாரி:

மேவுங் காதலில் உயர்வு தாழ்வெனும்
வித்யாசம் நினைப்பதும் இயல்பாமோ?
வித்யாசம் நினைப்பதும் இயல்பாமோ?

மதி:

விழியால் மொழியால் வித்யாச மில்லாது
வினவுகிறாய் பதில் சொல்லப்போமோ!
வினவுகிறாய் பதில் சொல்லப்போமா!

வேறு காட்சி

குமாரி:

கலப்பை தூக்கி முன்னாலே - கஞ்சிக்
         கலையம் தாங்கிப் பின்னாலே.
கழனிசெல்லும் அழகைப்பாரும் கண்ணாலே
                          புருஷன் மனைவி
(கழவி)

மதி:

உழைப்பினிலே, புழக்கத்திலே,
ஒன்றுபட்ட இன்பக்காதல் தன்னாலே -
                          அவர்
உடல் நிழலாய் வாழவந்தார் மண்மேலே.

குமாரி:

பாத்தியிலே நீர்பாய்ச்சும்
                         பாவையைப் பாரீர் - அந்தப்
                         பாவையைப் பாரீர்.

மதி:

                                    அதைப்
பார்த்துக் கணவன் ஏத்தம் இறைக்கும்
          நேர்த்தியைப் பாராய்.

குமாரி:

ஆத்துக்குள்ளே ஆடைதுவைக்கும்
           அழகியைப் பாரீர் - அந்த
           அழகியைப் பாரீர்.