23
அண்டப்புளுகு...... மேதாவி, ஞானஸ்தன்னு, நம்ம ஜனங்க விவரம் தெரியாததாலே, புகழ்ந்துகிட்டு இருக்கறாங்க... இவங்களெல்லாம் மேதாவியுமில்லே, மேலான குலமுமில்லே...ஏமாந்தவன் முதுகிலே ஏறிச் சவாரி செய்வதிலே கெட்டிக்காரனுங்க... பாடுபடாது வாழக் கத்துகிட்டவங்க... பார்க்கறயே கண்ணாலே, அவங்கள்ளே ஒரு ஆசாமியாவது, நாம் மாடு போல உழைக்கிறோம், நாய் போல அலைகிறோமே, அதுபோல, கஷ்டமான வேலை செய்கிறாங்களா...
வே:— கிடையாது...
சி:— குப்பை கூட்டறோம்—கட்டை வெட்டறோம்—மூட்டை சுமக்கிறோம்—கல் உடைக்கிறோம்—,—வண்டி இழுக்கறோம்-படாதபாடுபட்டுப் பிழைக்கிறோம்...
வே:— பாதி வயிறுதான் ரொம்புது, அப்பவும்...
சி:— அவங்களோட வாழ்வைப் பாரேன்...அழுக்குப்படுதா நகத்திலே....
சேத்திலே இறங்கி செந்தாமரையைப் பறிச்சிக்கிட்டு வந்து நாம் கொடுத்தா, வாங்கிப் பார்த்து, வாசனையாத்தான் இருக்குன்னு சொல்றாங்க...!
வே:— டே, தம்பீ! என் தலை சுத்துதுடா நீ பேசுறதைக் கேட்டா நியாயமாத்தான் இருக்கு... உன் பேச்சு... நான் வர்றேன். இன்னொரு நாளைக்கு, அப்ப எல்லாம் விவரமாச் சொல்லு.