காட்சி—2
[சில நாட்களுக்குப் பிறகு]
இடம்:— சம்பந்தம் வீடு.
இருப்போர்:— சம்பந்தம், ஒரு கிழவர்.ச:— என்னா ஜென்மமோ போங்க நம்ப ஜென்மம்—கால முழுவதும் கவலையும் கஷ்டமும் கொட்டிகிட்டே இருக்குது—மனசு நிம்மதி இல்லே...மகனாலே சுகப்படலாம்னு மனக்கோட்டை கட்டினேன், இப்ப பாருங்களேன், அவன் செய்கிற காரியத்தை?
கி:— தங்கமானவன் — உன்மேலே உசிரெ வைச்சிருக்கான் குடி கிடி எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது...
ச:— பொடிகூடப் போடமாட்டான் — குடும்பத்தை மேன்மையாக்க வேணும் என்கிற அக்கறை உண்டு.
கி:— பட்டாளத்திலே இருந்து உனக்கு மாசா மாசம் பணம் அனுப்பிக்கிட்டுத்தானே இருந்தான்....
ச:— ஒரு மாசம்கூடத் தவறினதே கிடையாதே — அவன் தானே ஒரே பிடிவாதமா, கல்லாட்டமா நான் இருக்கிறேன், நீ எதுக்காகத் தோட்டக்காரனா இருக்கிறது? வேண்டாம் அந்த வேலைன்னு சொன்னேன் — பூரிச்சுப் போனேனே அந்தப் பேச்சு கேட்டு...
கி:— எல்லாம் சரி ...ஆனா, இந்த அக்கிரமத்தைச் செய்யணும்னு சொல்றானே...