114
இருந்த பயமெல்லாம், களங்கமத்த பொண்ணு பொன்னி; அது கண் கலங்கினா என்ன செய்யறது என்கிற பயம் தான்...
தங்:— அது தான், உண்மையான காதல் பொன்னா! நானுந்தான் பயந்து பயந்து, மனதிலே மூண்டுகிடந்த பாசத்தை அடக்கி அடக்கிப் பார்த்தேன்...
பொன்:— நான் மட்டும்? சே! நாம்ப அந்தப் பக்கம் போனாத்தானே அந்த நினைப்பு வரும், நாலு நாள் அந்தப் பக்கமே திரும்பக்கூடாதுன்னு தீர்மானிப்பேன். நம்ம ஜதைகள் இருக்குதேல்லோ, அறுப்புக்காரன், ஆள் விழுங்கி, இப்படிப்பட்டவனுங்க அவனுங்களோடவே சுத்திக்கிட்டிருக்கிறது — இப்படியும் இருந்து பார்த்தேன். விட்டாதானே பொன்னி! கூடவே தொடர்ந்து வர ஆரம்பிச்சா பொன்னி!
தங்:— உன்னைத் தேடிக்கொண்டா...
பொன்:— அந்த எண்ணத்தைச் சொல்றேன்... எங்கே சுத்தினாலும், எந்த வேலையிலே ஈடுபட்டாலும், பொன்னியோட நினைப்புத்தான்!
தங்:— அதை ஏன் கேக்கறே, போ! நானும் அதே பாடுபட்டுக் கொண்டுதான் இருந்தேன், எந்தப் பக்கம் திரும்பினாலும், சுகுணாதான்!
பொ:— நான் எப்பவும் தூங்க ஆரம்பிச்சா, மரக்கட்டை போல ஆயிடுவேன் — பொன்னியிடம் காதல் ஏற்பட்ட பிறகு தூக்கமே சரியா இருக்கறதில்லை. நம்மப்பய சின்னான்கூடச் சொல்லுவான், தூக்கத்திலே கினா கண்டு, பொன்னி பொன்னின்னு உளறுவேனாம்!
தங்:— அப்படித்தான், பொன்னா, அப்படித்தான்! எவ்வளவு பெரிய முரடனாக இருக்கட்டும், போக்கிரியாக இருக்கட்டும், இந்தக் காதல் தீ மூண்டுவிட்டா, ஆசாமிகள் பாடு...உம் ! என்னான்னு சொல்றது அதை—அணையாத்தீ—அப்பா அது, நாளாக வளருகிற நெருப்பு.