உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சொர்க்கவாசல் மதி: (சோகமாக) என்ன செய்வது? கவி: புறப்படு, நான் சொன்னபடி. மதி: எங்கு பெரியவரே! நரியூரில் இருக்கப் பயந்து கொண்டு புலியூர் புகுவது சரியாகுமா? சோமநாதன் செல் வச் செருக்கால் என்னை இழிவாகப் பேசினான். அதற்காக அரச சபையில் இடம் தேடக் கிளம்பினால்-- கவி: இடம் கிடைக்காதோ என்ற அச்சமோ? மதி: அல்ல, அல்ல; பெரியவரே! அரச சபை ஆயிரத் தெட்டு கேடுகள் நடமாடும் இடம். அங்கு சென்றால், கலையை அடகு வைத்துவிட்டு, கட்டியங் கூறித்தானே பிழைக்க வேண்டும். சரியா. முறையா? கவி: நியாயமான கேள்வி. ஆனால் உள்ளத்தில் உரம் உண்டு உனக்கு. அரசனுக்கு அடிமையாகாமலே, கலைத் தொண்டு செய்ய முடியும். அகமும், புறமும் பாடிய அருந் தமிழ்ப் புலவர்கள், அரசர்களைக் கண்டு அஞ்சினதில்லை.----. இச்சகம் பேசிப் பிழைத்ததில்லை. தவறி நடந்த மன்னரை இடித்துரைக்கத் தயங்கினதில்லை. மதி: அந்த உள்ள உரம் வேண்டுமே- எனக்கு. உண்டா? கவி: உண்டு, உண்டு. நான் அறிவேன். உன் கவிதை மக்களுக்குப் புதிய விருந்தாகப் போகிறது. புறப்படு, புறப் படு! [ஓலை ஒன்று கொடுத்து...) இதை என் மகளிடம் கொடு. பெரிய வணிகருக்கு வாழ்க் கைப்பட்டிருக்கிறாள், மதிவாணா! [வெளியே வண்டி வந்து நிற்கும் ஓசை கேட்கிறது] 9.