உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 539 வணி: உன் அழகுக்கு ஏற்ற அந்தஸ்தை தேடிக் கொடுத் தேன். [வணிகரின் குரலில் கோபத்துடன் சோகமும் தோய்ந்து வருகிறது.) பரம திருப்தியுடன் பாலும், டழமும் சாப்பிட்டுவிட்டு, பரிமள வாடை கொண்ட பஞ்சணையில் நீ படுத்து உறங் கின போதெல்லாம், நான் பாழும் கணக்கு, கணக்கு என்று அதிலே மூழ்கிக் கிடந்தேன். உனக்கு இவ்வளவு போக போக் கியத்தை அளித்தேன். [மாதின் முகத்தில் இலேசாகப் உணர்ச்சி தோன்றுகிறது.) பச்சாதாப மாது: நான் கேட்கவில்லையே, ஏழைகளைக் கெடுத்து இவைகளைத் தாருங்கள் என்று. வணி: கோபத்தைக் கிளறாதே! மனிதனை மிருக மாக்கிவிடாதே. எங்கோ கிடந்த உன்னைத் தேடி எடுத்துச் சீமாட்டியாக்கினேன். நீ சீறிச் சீறிப் பேசினாயாம், மன் றத்திலே மாது : தங்களைக் கண்டித்துப் பேசுவேனா? முறையைக் கண்டித்தேன்.நாடு சீரழியும் காரணம் என்ன என்று எடுத் துப் பேசினோம். வணி: அறிவு கெட்டவளே! வியாபாரி நான். இலாபம் பெறுவது என் தொழில். அதை அனுபவிப்பவள் நீ. நீ கண்டிக்கிறாய், கொள்ளை லாப முறையை. மாது: உமது செயலுக்கு நான் உடந்தை அல்லவே. உம்முடன் இருக்கிறேன், மனைவியானதால்-அவ்வளவு தான். வணி: நான் சாமர்த்தியமாய் தொழில் நடத்தியிரா விட்டால்,நீ எங்கு இருப்பாய் தெரியுமா?