சொர்க்கவாசல் 159 திலகா : (தழதழத்த குரலில்) என்ன சொல்லுகிறீர்
இன்னுயிரே, என்ன சொல்கிறீர்? முத்து (உருக்கமாக) வேடிக்கைக்கு கேட்டேன் கண்ணே! இவ்வளவு நாளாகி விட்டதே என்று கேட்டேன். திலகா: கேட்கத் துணிந்ததே உமக்கு. [முத்து அடிக்கடி வேறு பக்கமாகப் பார்க்கிறான்-- திலகா வேறு பக்கம் பார்க்கும்போது அவளைக் கண்டு பெருமூச்செறிகிறான். அவளைக் காணும் போது புன்னகை. அவள் காணாதிருக்கும்போது கலக்கம்... ஒரு பெரிய ஒரு பெரிய மரத்தடியில் இருவரும் உட்காருகின்றனர்.] காட்சி-77 இடம்: முத்துமாணிக்கம் மாளிகை--உட்புறம். இருப்: நண்பன், மருத்துவர். நிலைமை: பலகணி வழியாக மருத்துவரும், நண் பரும் பார்க்கிறார்கள். மருத்துவரின் முகம் மலருகிறது. நண்பன் முகம் சுளித்துக் கொள்கிறான். நண்: பெருந்தவறு செய்து விட்டேன். (தன்னையுமறியாமல் வர் திடுக்கிட்டு...) . கூறிவிடுகிறான். மருத்து மருத்: என்ன சொன்னீர்? அந்தக் காட்சியிலே சொக் கிப் போயிருந்தேன். உமது பேச்சைக் கவனிக்கவில்லை. நண்பன்: (சமாளித்துக் கொண்டு) ஒன்றுமில்லை. காட்சி-78 இடம்: முத்துமாணிக்கம் மாளிகைத் தோட்டம் இருப்பு திலகா, முத்துமாணிக்கம், இளமங்கை, வயதான ஒரு மாது. நிலைமை: திலகா, முத்துவின் முகத்தைத் தன் கரங்களிலே எடுத்துத் தன் முகத்தருகே கொண்டு போகும்போது, சாமர்த்திய மாக முத்து விலகிக் கொள்கிறான்'.