174 சொர்க்கவாசல் காட்சி 87 இடம்: குமாரதேவியின் அரண்மனை உட்புறம். இருப்: அரசி, அமைச்சர், படைத்தலைவர். குமார (கோபமாக) நான் ஒரு குடிமகனை மணம் செய்துகொள்வது நாட்டுக்கு அவமானம் என்கிறீர்? அமை: நாங்கள் கூறுவதல்ல தேவி. ப. தலை : மக்களின் மனப்போக்கைக் கவனித்தோம்; மக்களின் சார்பாகப் பேசுகிறோம்! குமார (அமைச்சரைப் பார்த்து) தெளிவும் தைரிய மும் கொண்ட எந்தப் பெண்ணும் தூய காதலுக்குக் கட்டுப் பட முன்வரலாம். அரசியாக அமர்ந்திருக்கும் ஒரே கார ணத்துக்காக, நான் அந்த உரிமையை இழக்க வேண்டுமா? என் எதிர்காலம் பாலைவனமானால் என் நாடு சோலை யாகுமா? இதுவா நியாயம்? என் வேதனையைக் கிளறாதீர். அவரை அன்றி நான் வேறொருவரை மணம் செய்துகொள்ள முடியாது... அமை: மனம் கரைகிறது தேவி! எனினும், மண்டலத் தின் நலன், ஆபத்து உண்டாக்கக்கூடாதே என்ற அச்சம், என் மனதைக் கல்லாக்கிவிட்டது. குமார் : சரி, என் முடிவான கருத்தைக் கூறிவிட்டேன்? அமை: எங்கள் வேண்டுகோளை நிராகரிக்க ப. தலை : துணிவு, தேவியாருக்கு இருக்கிறது அமைச் சரே. துளியும் உமக்குத்தான் இல்லை. இந்தத் திருமணம் நிச்சயம் என்றால் நான் படைத்தலைவனாக இருந்து பணி யாற்ற முடியாது; தங்கள் திருமணத்திற்கு நான் அனுப்பக் கூடிய பரிசு அதுதான். அமை: தேவி! நான் மட்டும் பதவியில் ஒட்டிக் கொண் டிருக்க முடியுமா? குமார: (படைத்தலைவரைப் பார்த்து) உள்ளத்தின் போக்கை உணரமுடியாத உம்மிடம் வாதிடுவது, வீண்
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/174
Appearance