உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஆனந்தத் தேன் யாது. தெரிந்த பல பொருள்களை அநுபவத்தில் அடை யாமல் இருக்க முடியும். தெளிய அறிந்தேன் என்றால் அநு பவத்தினாலேயும் அதனைப் பெற்றேன் என்று பொருள். "ஆறுமுகமுடைய தேசிகனின் திருவருளினாலே நான் அரு. னொளி பெற்று, அதன் துணையினால் ஞான மலையின் உச்சியை அடைந்து, கால எல்லையைக் கடந்து, பூத எல்லை யைக் கடந்து, இட எல்லையைக் கடந்து, தனக்குச் சமானம் இல்லாத தன்மையில் இருக்கின்ற ஒன்றை, அன் பினாலே விளைந்த ஆனந்தமாகிற தேனை நான் பெற்றேன். அது வெறும் பாழைப் பெற்ற தனி. அதனை நான் பெறும் படியாக, அவன் உபதேசம் செய்தான். நான் தெளியும்படி யாக விளம்பினான்" என்று அருணகிரியார் சொல்கிறார். ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத்து உச்சியின் மேல் அளியில் விளைந்ததோர் ஆனந்தத் தேனை, அநாதியிலே வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத் தெளிய விளம்பிய வாமுகம் ஆறுடைத் தேசிகனே! [அருள் என்னும் ஒளியில் புதியதாகத் தோன்றிய உயர்ந்த ஞானமாகிய மலையின் உச்சியில் அன்பிலே விளைந்ததாகிய ஒப்பற்ற ஆனந்தம் என்னும் தேனை, கால எல்லையற்ற அநாதியில், இட எல்லையற்ற வெளியில் உண்டான வெறும் சூனியத்தைப் பெற்ற வெறும் தனியான அநுபவ நிலையை நான் அனுபவத்தால் உண ருப்படி முகம் ஆறுடைய குருநாதன் உபதேசம் செய்தவாறு என்ன வியப்பு1

ஒளியென்றது அருளை. பூதரம் - மலை. அளி - அன்பு. வெளி- ஆகாசம். விளம்பியவா விளம்பியவாறு; என்னே என்று ஒரு சொல்லை வருவித்து முடிக்க வேண்டும். தேசிகன் - குரு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்தத்_தேன்_1956.pdf/46&oldid=1725252" இலிருந்து மீள்விக்கப்பட்டது