110 ஆனந்தத் தேன் வற்றில் நித்தியம் எது, அநித்தியம் எது என்று சிந்தித்து அறியும் விவேக உணர்ச்சி உண்டாகும். சாவு மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் நாம் இறந்து போகப் போகிறோம் என்ற உண்மை தெரியாதது அல்ல. ஆறு ஏழு வயசுக் குழந்தைக்கே சாவைப்பற்றித் தெரியும். அதைத் தெரிந்துகொண்ட பிறகும் நல்ல நெறியில் செல்ல முயல்வதில்லை. நமக்குச் வருவது உறுதியென் உணர்ந்து, பிறந்து பிறந்து சாகாமல் இருக்கும் நிலையை நாம் அடைய வேண்டுமென்ற உணர்ச்சி உடையவர் களுக்கு, உலகிலுள்ள இருளில் அகப்பட்டு மயங்கித் தூங்கிப் போகாமல் இருக்க எம்பெருமான் திருக்கரத்தி லுள்ள கோழி கூவுகிறது. அதைக் கேட்டு முயற்சி உடைய மனிதர்கள் எல்லோரும் அந்தக் கோழியைக் கொடியாக உடைய எம்பெருமானை வணங்கத் தலைப்பட வேண்டும். "கோழிக் கொடியன் அடிபணி யாமல் குவலயத்தே வாழ்க் கருதும் மதியிலிகாள்" என்று வேறு ஒரு பாட்டில் பாடுகிறார் அருணகிரியார். அந்தச் சேவலின் செயலை அவர் சொல்வதைக் கவனிக் கலாம். 3 வேலவன் படைபட்ட வேலவன் பால்வந்த வாகைப் பதாகைஎன்னும் தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ள. மயிலைப் பற்றிப் போன பாடலிலே சொன்னபோது, வெற்றி வேலோன்... வாகனம்" என்றார். இங்கேயும்
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/124
Appearance