உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவற் பதாகை 109 கோழி கூவியும் எழுந்திருக்காத மக்கள் இருக்கிறார் கள். சூரியன் உதயமாகியும் தூங்கும் கும்பகர்ணர்களும் இருக்கிறார்கள். கோழி கூவுவதைப் பயன்படுத்திக் கொள்கிறவர்கள், சூரியன் ஒளியையும் பயன்படுத்திக் கொள்வார்கள்: முருகன் ஞானமே வடிவானவன்; ஞானபண்டித சாமி. அவன் அருளால் அறியாமை இருள் ஒழிய வேண்டும். அது ஒழிவதற்கு முன்னால் நம்முடைய தூக்கமயக்கம் போக வேண்டும்; தாமத குணம் தொலைய வேண்டும். அதைப் போகச் செய்வது எது? அதுவும் இறைவன் திருவருள்தான். சாதன அருள் றைவனுடைய திருவருளில் இரண்டு வகை உண்டு. ஒன்று சாதன அருள்; அவனுடைய பேரருளைப் பெறு வதற்கு ஏற்ற முயற்சிகளைச் செய்யும் ஆற்றலை அளிப்ப து. "அவன் அரு ளாலே அவன்தாள் வணங்கி! என்று மணிவாசகர் குறிப்பிடும் அருள் அது. அவன் தாளை வணங்கிப் பக்குவம் அடைந்தபோது கிடைக்கும் அருள் சாத்திய அருள். ஒன்று கருவி: மற்றொன்று பேறு. ஒன்று வழி; மற்றொன்று திருமாளிகை. எல்லோரும் சாதனங்களைப் பயிலுவதில்லை. அதற்கு ரிய பாக்கியம் அவர்களுக்கில்லை என்றே சொல்லவேண்டும். தூங்கிக்கொண்டிருப்பவர்களை எழுப்பும் கோழியைப் போல, அவனை வணங்கிச் சாதனை செய்ய இறைவனுடைய அருளே, சாதன அருளே வேண்டும். அந்த அருளுக்கு அடையாளமாக நிற்பது கோழி. அது தூங்குகிறவர்களை எழுப்பிக் கதிரவனது வருகைக்குக் காத்திருக்கச் செய் கிறது. அவன் அருளைக் கொண்டேதான் உலகிலுள்ள