108 ஆனந்தத் தேன் பொருள்களிடத்திலும் இறைவனுடைய தொடர்பையே காண்கிறார்கள். முருகனுடைய பக்தர்களுக்குக் கோழி கூவுவதைக் கேட்டவுடனேயே விழிப்பு ஏற்பட்டுவிடுகிறது. கொக்கறு கோ என்ற ஒலி முருகனுடைய நினைவை உண்டாக்கு கிறது. உலகத்துக் கோழி உலகத்தில் உள்ளவர்கள் இருள் நிரம்பிய இரவில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். கோழியின் குரலைக் கேட்ட மாத்திரத்தில் இருள் நீங்கி ஒளி வரப்போகிறது என்பதை உணர்ந்து கொண்டு எழுந்துவிடுகிறார்கள். எழுந்தவுடன் இருள் நீங்குவதில்லை என்றாலும், நிச்சயமாக இன்னும் சிறிது நேரத்தில் பொழுது விடிந்துவிடும் என எண்ணி ஒளியை எதிர்நோக்கி விழித்துக்கொண்டுவிடுகி றார்கள். 'சூரியன் எழப் போகிறான்; அவனை எதிர்நோக்கி இப்பொழுதே எழுந்துவிடுங்கள்' என்று எச்சரிக்கை செய் வது போலக் கூவுகிறது கோழி. இது உலகத்துக் கோழி யின் செயல். அகவிருள் மக்க புறத்தே கப்பியிருக்கும் இருளைப் போல் ளுடைய அகத்திலும் இருள் உண்டு. அந்த இருளுக்கு அறியாமை என்று பெயர். புறத்தே இருளில் எந்தப் பொருளின் உணம்ை உருவமும் தோன்றாததுபோல, அகத்துள்ள இருளினால் பொருள்களின் உண்மையான இயல்பு தோன்றுவதில்லை. எது நிலைக்கும் தன்மையை உடையது, எது நிலையாத்து என்று பகுத்துப் பார்க்கும் திறமை இருப்பதில்லை. அறியாமையாகிய மருளால் பொருள் அல்லாதவற்றைப் பொருளாக எண்ணி மயங்கி, மேலும் மேலும் பிறவிக்கு வழிதேடிக் கொள்கிறோம்.
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/122
Appearance