உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளன் 1954.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அருளாளன் ஆலயத்தில் சந்நிதிக்கு நேரே வெளியில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் நின்ற திருக்கோலத்தோடு எழுந்தருளியிருக் கிறார். கோயிலின் மேல்தளத்தில் ஒரு சிறிய சந்நிதி இருக் கிறது. அதை, 'தடுத்தாட் கொண்டவர் கோயில்' என்று சொல்கிறார்கள். மேல் ஏறிப் போய்ப் பார்க்க முடியாது; படிக்கட்டு இல்லை. இறைவன் அங்கே தோன்றி மறைந் தான் என்ற ஒரு செய்தியை இப்பொழுதும் அங்குள்ள மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். திருவெண்ணெய்நல்லூர் தென் கரையிலே இருக்கிறது. தென்பெண்ணையாற்றின் "தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் அத்தா" என்று அங்குள்ள பெருமானை விளித்துச் சொல்லு கிறார். அத்தன் என்றால் தகப்பனார் என்று பெயர். இறை வன் தம்மிடத்திலே மகனைப் போன்ற அன்பு கொண்டு, உரிமையோடு வந்து காத்தருளினான் என்ற நினைப்பினாலே வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் அத்தா என்கிறார். "உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே?" என்று பாட்டு முடிகிறது. இறைவன் எப்பொழுதும் ஆண்டா னாக இருக்கிறான். அதனாலே ஆண்டவன் என்ற பெயர் அவனுக்கே உரியதாக இருக்கிறது. உலகில் எத்தனையோ ஆண்டவர்களும் எஜமானர்களும் இருந்தாலுங்கூட. அவர் களெல்லாம் வேஷதாரிகளாகிய ஆண்டவர்களே ஒழிய, 'உண்மையாக உயிர்களுக்கெல்லாம் உரிமையுடைய ஆண்டவர்கள் ஆகமாட்டார்கள். இறைவன் ஒருவன்தான் ஆண்டான் அல்லது எஐமானன்.உயிர்கள் அத்தனையும் ஆட்கள் : அவனுக்கு அடிமை.."என்று உன்அடிமை யல்லவோ?" என்று நான் பேசுகிறார். அன்று நீ தாயுமானவர் >>

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/25&oldid=1725528" இலிருந்து மீள்விக்கப்பட்டது