அருளாளன் 19: வாக்குறுதி அளித்திருக்கிறான். நாயனார் அதை மறந்து விட்டாலும், கடன் கொடுத்தவன் தன்னுடைய பொருளைக் கைப்பற்றுவதற்கு நினைந்து முயற்சி செய்வது போல இறைவன் முயற்சி செய்தான்; வலியத் தடுத்து ஆட்கொண்டான். "நான் உனக்கு முன்னாலே ஆளாகி விட்டேன். அந்தப்படி ஆளான திறத்தை நான் மறந்தேனே ஒழிய, அதை விட்டு ஒழிந்தேன் அல்லன். ஆட்கொண்டவனாகிய நீதான் வந்து எனக்கு நினை வுறுத்தினாய். நான் மாட்டேன் என்று சொன்னாலும் நமக்குள் உள்ள உறவு அற்றுப் போகுமா? என்று கேட்கிறார் சுந்தரர். வெண்ணெய் நல்லூரில் உள்ள அத்தனே, என்னு டைய அப்பனே, என்னை ஆட்கொண்டவனே, நான் உனக்கு அநாதி காலமாக ஆளாக அமைந்திருக்கிறேன். அப்படி இருக்கையில் இப்பொழுது எதையோ நினைத் துக்கொண்டு அல்லது அதை மறந்துவிட்டு. நாள் உனக்கு ஆள் அல்லேன் என்று சொன்னால் அது முறை யாகுமா? அது நடக்கக்கூடிய காரியமா? அதைக் காட்டிலும் பேதைமை ஒன்று உண்டா? என்றெல்லாம் நினைந்து பாடினார் ஆளுடைய நம்பிகள். பித்தா[பிறை சூடி! பெரு மானே! அரு வாளா! எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத்து உன்னை வைத்தாய்; பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட் டுறையுள் அத்தாஉனக்கு ஆளாய்இனி அல்லேன்எனல் ஆமே? அரு [பித்தனே, பிறையைச் சூடுபவனே, பெருமானே. ளுடையவனே, இப்போது எதனாலும் உன்னை மறவாமல் நினைக் கின்ற அடியேனுடைய மனத்தில் உன்னை வைத்தாய்; பெண்ணை யாற்றின் தென்கரையில் உள்ள வெண்ணெய் நல்லூரில் அருட்
பக்கம்:அருளாளன் 1954.pdf/28
Appearance