உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளன் 1954.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 அதனாளன் அந்தப் பெண்மணி அன்று முக மலர்ச்சியோடு இருக் கிருள். பக்கத்து வீட்டில் உள்ள தோழி மாலை வேளையில் வந்து பேசிக்கொண்டிருக்கும்பொழுது அவளுடைய முக மலர்ச்சியைக் காண்கிறாள். "இது என்ன என்றும் இல்லாத காட்சியாக இருக்கிறதே!" என்று கேட்கிறாள். "இன் றைக்கு அவருடைய திருவருள் எனக்குக் கிடைத்தது என்று மகிழ்ச்சியோடு சொல்கிறாள். "என்ன செய்தார்?' என்று தோழி கேட்கிறாள்."அவருடைய திருக்கரம் என் மேல் பட்டது" என்று சொல்லி உவகை அடைகிறாள். அது என்ன?" என்று தோழி விவரத்தை விசாரிக்கிறாள். "இன்றைக்கு என்னைத் தொட்டு அடித்தார். என்னையும் ஒரு பொருளாக எண்ணி என்னைத் தம் திருக்கரத்தால் தீண்டினார்" என்று உவகை கொண்டாள். அவளுடைய அன்பின் உயர்வு அது . அப்படியே அன்பர்களும் தமக்கு ஏதேனும் துன்பம் உண்டானால் இறைவனுடைய திருவருளினால் வந்தது. என்று நினைக்கிறார்கள்; இறைவன் நம்மையும் பொருட் படுத்தி அவ்வப்போது திருத்துகிறான்" என்று நினைத்து மகிழ்கிறார்கள். தங்களை அவர்கள் மிகவும் இழிவாகச் சொல்லிக்கொள் வது வழக்கம். செருக்கு உடையவர்கள் சிறிய காரியம் செய்தாலுங்கூட, நான் அது செய்தேன்; இது செய்தேன்" என்று சொல்லிக்கொள்வார்கள். ஆனால் இறைவனுடைய அருளைப் பெற்றவர்களோ எப்பொழுதும் தம்மைக் குறைத்துக் கொண்டே பேசுவார்கள்; நாயென்றும் பேயென்றும் சொல்லிக்கொள்வார்கள். "நாயேன் நாயேன்" என்று சொல்வது அவர்கள் வழக்கம். அதன் கருத்தைச் சிறிது பார்க்கலாம். இழிந்தவர்களை நாய் என்று சொல்வது தமிழர் வழக்கம். நம்முடைய வசவுத் தமிழிலே சேர்ந்தவை காயே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/75&oldid=1725577" இலிருந்து மீள்விக்கப்பட்டது