உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளன் 1954.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 அருளாளன் இந்த எண்ணங்களெல்லாம் சுந்தரமூர்த்தி நாயனா ருக்குத் திருக்கழிப்பாலை என்ற தலத்திலே தோன்றின. திருக்கழிப்பாலை வளப்பமான வயல்கள் நிரம்பிய தலம்; தண்ணீர் குழ்ந்த வயல்கள் பரவியிருக்கின்ற இடம். தண்கழனிக் கழிப்பாலை மேயானே ! கழிப்பாலை மேயானைத் தரிசித்து அவனுடைய அருளின் விளைவைச் சொல்லுகிறார். ஒறுப்பதும், பல குற்றங்களை நினையாது அவற்றை யெல்லாம் பொறுப்பதும், தம்மையும் பொருட்படுத்தி அவ்வப்பொழுது திருத்திக் கொள்வதும் ஆகிய காரியங்கள் யாவும் அந்த அருளின் விளைவே என்று நினைந்து பாடி இன்புறுகிறார். ஒறுத்தாய் நின் அருளில்; அடியேன் பிழைத்தனகள் பொறுத்தாய் எத்தனையும்; நாயேனைப் பொருட்படுத்திச் செறுத்தாய்; வேலைவிடம் அறியாமல் உண்டுகண்டம் கறுத்தாய்; தண்கழனிக் கழிப்பாலை மேயானே! [குளிர்ந்த வயல்கள் நிறைந்த திருக்கழிப்பாலை என்னும் திருத்தலத்தில் விரும்பி எழுந்தருளி யிருக்கும் இறைவனே! நின்னுடைய திருவருளினால் என்னை ஒறுத்தாய்; அடியேன் பிழைத்தவை எவ்வளவானாலும் அவற்றைப் பொறுத்துக் கொண் டாய். கடலில் தோன்றிய நஞ்சை அதன் தீமை நன்மையை அறியாமல் உண்டு திருக்கழுத்தில் கறுப்பு நிறத்தைக் கொண்டாய். நின் அருளில் என்பதை எல்லாவற்றேடும் கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும். நின் அருளில் ஒறுத்தாய், நின் அருளில் பொறுத்தாய், நின் அருளில் செறுத்தாய் என்று பொருத்துவது. சிறப்பு. பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தாய் என்று இயைக்கவேண்டும். செறுத்தாய் - கோபித்தாய்,வேலை,கடல் கண்டம் - கழுத்து,மேயான் - விரும்பி வாழ்பவன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/79&oldid=1725581" இலிருந்து மீள்விக்கப்பட்டது