உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளன் 1954.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அருளாளன் வாழைகள் நன்றாக வளர்ந்து குலையின்று நிற்கின்றன். குலைகளில் இயற்கையாகவே கனிகள் குலுங்குகின்றன. வாழையின் அடிமரத்தில் கொஞ்சம் கருமை படர்ந்திருக் கிறது. மேலே செக்கச் செவேலென்று குலைகள் தள்ளியிருக் கின்றன. நன்றாகக் கனிந்திருப்பதனாலே கனிகளெல்லாம் சிவந்திருக்கின் றன. அந்தப் பழங்களிலிருந்து தேன் சொரி கிறது. இவற்றைக் கண்ணாலே கண்டால் கற்பனை நெஞ்சம் படைத்தவர்களுக்கு. எத்தனை அழகாகத் தோன்றும்! வேறு யாராக இருந்தாலும் அந்தச் செங்கனிகள் சொரி கின்ற தேனைக் கண்டால் அவர்கள் நாவிலிருந்து நீர் சொரி யுமே. சுந்தரமூர்த்தி நாயனார் அவற்றை யெல்லாம் கண் ணாலே கண்டார். கண்ட மாத்திரத்தில் இறைவனுடைய நினைவுதான் வந்தது. "என்ன அழகு! இவற்றை யெல் லாம் படைத்த ஆண்டவன் போழகனல்லவா?" என்று அவருடைய உள்ளத்திலே இனிமை பொங்கியது. பின்பு அந்த ஊர்த் திருக்கோயிலுக்குச் சென்றார். அந்தக் கோயிலில் முல்லைக் கொடி படர்ந்திருக்கிறது. முல்லையில் பல சாதிகள் உண்டு. கொகுடி முல்லை என்பது ஒரு சாதி. அதுதான் அந்தத் தலத்துக் குரிய விருட்சம். அதனால் அந்தக் கோயிலுக்குக் கொகுடிக் கோயில் என்று ஒரு பெயர். ". வெளியிலே வாழையின் வளத்தைக் கண்டு, அந்த வாழையில் உள்ள செங்கனிகளின் அழகையும் கண்டு, அந்தக் கனிகளிலிருந்து சொரிந்து வழியும் தேனையும் கண்டு கோயிலுக்கு உள்ளே புகுந்தவர். அங்கும் ஓர் அழகான காட்சியைக் கண்டார். மணம் பரப்பும் முல்லைக் கொடி படர்ந்த பந்தல் அந்தக் கொகுடிக் கோயிலில் இருப்பதைப் பார்த்தார். "என்ன அழகு! இறைவனுடைய படைப் பிலே உள்ள அழகுதான் என்னே !"- அவருடைய உள்ளம் துள்ளிக் குதித்தது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/81&oldid=1725583" இலிருந்து மீள்விக்கப்பட்டது