உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளன் 1954.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 அருளாளன் வில்லை. பாட்டைப் பாடும்போதெல்லாம் புதுமை மணம் நெஞ்சத்திலே ஊறுகிறது. அவர் பாடும் பாமாலை விருந் தாக இருக்கிறது. விருந்தாய சொல்மாலை கொண்டேத்தி. இறைவனைத் தம்முடைய கண்ணாலே கண்டு கர சரணாதி அவயவங்களினாலே பணிந்தார். அது உடம்பால் ஆகிய செயல். அடுத்த கரணமாகிய வாக்கினால் செய்யும் செயல், சொல் மாலை சூடுவது. 'விருந்தாய் சொன் மாலை' கொண்டு ஏத்தினார். இவ்வளவு பணிகள் செய்தும், இத் தனை விருந்தாகிய சொல் மாலைகளைச் சூட்டியும் அவருக்கு மன நிறைவு உண்டாகவில்லை. அவருடைய உள்ளத்தில் இறைவனை நினைத்துப் பார்க்கிறார். அப்பொழுதுதான் இனிமை பரிபூரணத்தை அடைகிறது. பாட்டைக் காதிலே கேட்கும்போது ஓரளவு இனிக்கும். அதன் கருத்து உள் ளத்துக்குள்ளே புகும் பொழுதுதான் மிக மிக இனிக்கும். இறைவனைக் கண்டு பணிந்து எத்திய சுந்தரர் இறை வனை நெஞ்சிலே நினைக்கிறார். உணர்ச்சிகளையெல்லாம் ஒருங்கே சேர்த்து அவனுடைய அருளை நினைக்கிறார். அவ்வாறு நினைக்கும்பொழுது எத்தனை இன்பமாக இருக் கிறது? நிணைந்தபோது அவர் நமக்கு இனிய வாறே! அந்த இனிமை இப்படியிருந்தது என்று அளவிட்டுச் சொல்ல முடியவில்லை. "அவர் நமக்கு இனியராக இருக்கும் திறம் என்னே! என்று அநுபவாதிசயப் பெருக்கிலே பாடுகிறார். கண்ணினாலே கண்ட இயற்கை அழகிலே இனிமை, தரிசித்த மூர்த்தியினுடைய காட்சியில் இனிமை, அவனைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/87&oldid=1725589" இலிருந்து மீள்விக்கப்பட்டது