உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளன் 1954.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இம்மை மறுமைப் பயன் சுந்தரமூர்த்தி நாயனார் தமக்கு ஏதாவது பொருள் வேண்டுமானால் உலகத்திலுள்ள மக்களிடத்திலே போய் இரக்கும் வழக்கம் இல்லை. அவருக்கு இறைவன் மிகவும் உரியவனாகிவிட்டான்: தோழனானாள். இடுக்கண் வரும் போதெல்லாம் உதவுவதுதானே தோழனுடைய இயல்பு? மனிதத் தோழனாக இருந்தால். தனக்கே குறைபாடு இருப் பதனால் வேண்டியதைக் கொடுக்க முடியாது. ஒன்றாலும் குறைவிலா நிறைவையுடைய ஆண்டவன் எல்லாவற்றை யும் கொடுக்கும் ஆற்றல் உள்ளவன். அவனைத் தோழனாகப் பெற்ற தம்பிரான் தோழருக்கு எந்தப் பொருளால் குறை வரப் போகின்றது? அவர் குறையை முன்னாலே குறிப்பாக அறிந்து கொடுப்பதில்லை, ஆண்டவன். குறை நேர்ந்தால் அந்தக் குறையை நீக்கிக்கொள்ளச் சுந்தரமூர்த்தி நாயனார் பாடு வார். அந்தப் பாட்டை எம்பெருமான் கேட்க ஆசைப் பட்டான். அது மாத்திரமா? உலகமெல்லாம் கேட்க வேண்டுமல்லவா? உலகம் அந்தப் பாடல்களை ஓதிப் பயன் பெற வேண்டும் என்பது இறைவன் திருவுள்ளம். அவர் பாடவேண்டும் அல்லவா? அதன் பொருட்டு அவருடைய குறையை வாய்விட்டுச் சொல்லுமளவும் வாளா இருப்பான் ஆண்டவன். ஒரு முறை திருப்புகலூருக்கு வந்து சேர்ந்தார் சுந்தர மூர்த்தி நாயனார். அவருக்குப் பொன் வேண்டியிருந்தது. இறைவனிடத்திலே வந்து, "ஆண்டவனே, எனக்கு இப் பொழுது செலவாக இருக்கிறது; பணம் வேண்டும்" என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/89&oldid=1725591" இலிருந்து மீள்விக்கப்பட்டது