உணர்ச்சிகள் நாம் உணரும் உணர்ச்சிகளாகவே பல இடங்களில் இருக்கின்றன. சில சமயங்களில் நாம் சொல்ல வேண்டியதைக் தான் இவர் சொல்லுகிறாரென்று கூறிவிடலாம் போல் இருக் கிறது, இவர் பாட்டு. நாமும் உழன்று துன்புறுகிறோம்; இவரும் துன்புற்றார். ஆனால் அந்தத் துன்பத்தினின்றும் விடுபட்டு இன் புற்றார். நாமோ-? மிகவும் அல்லற்பட்டுத் தேடிய பொருளிடம் நமக்கு உண் டாகும் ஆர்வமும் பற்றும் மிகுதியாக இருக்கும். பல காலம் துன்பக் கடலில் ஆழ்ந்து கரையேறிய அப்பருக்கு இறைவன் கனி யாய், அமுதமாய், பண்ணாய், பாட்டாய் இனிக்கிறான். மெய் வருந்த நெடுநேரம் உழைத்துவிட்டு, அவ்வுழைப்பினால் உடம்பிலே களைப்பும் வயிற்றிலே பசியும் உடைய உழைப்பாளி ஒருவனுக்கு இன்சுவை உணவு கிடைத்தால் எத்தனை ஆர்வததோடு உண்டு சுவைப்பானோ, அப்படி இவர் இறைவனுடைய குண நலங்களை அநுபவிக்கிறார். தம்மைப் பற்றித் பற்றித் தனியே தனியே சுட்டிப் பெயர் கூறுவது இவர் வழக்கம் அன்று. நால்வரில் அப்பரும் மணிவாச கரும் இந்த வகையில் ஒப்புடையவர்கள். ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் இறைவன் இராவண னுக்கு அருள் செய்த வரலாற்றைச் சொல்வது நாவுக்கரசர் வழக்கம். சமண சமயத்திலே புகுந்து பலகாலம் இருந்து பின்பு இறைவன் அருளால் சூலைநோய் தோன்றச் சிவபிரானைத் தஞ்சம் அடைந்து மீண்டும் சைவரானவர் இவர். தாம் செய்த அபராதங் களைப் பெரியனவாக நினையாமல் தம்மை ஆட்கொண்டது சிவ பிரானுடைய பெருங் கருணைத் திறம் என்று நினைந்து உருகுகிறார். மலையெடுத்துத் தீச்செயல் புரிந்த இராவணனுக்கும் அருள் செய்த கருணையை ஒத்தது இது' என்ற எண்ணம் வந்தது. அதனால் அத திருவிளையாட்டை எடுத்துச் சொல்லும் வழக்கத்தை மேற்கொண்டார். இதைச் சேக்கிழார், "இத்தன்மை நீகழ்ந்துழி நாளின் மொழிக்கு இறையாகிய அன்பரும், 'இந்தெடுதான் சித்தந்திகழ் தீவினை யேன் அடையும் திருவோஇது!' என்று தெருண்டறியா
பக்கம்:இரவும் பகலும்.pdf/6
Appearance