iv ஒருமாளைத் தரிக்கும் ஒரு தனை யுங் காறும் ஒருநாற்பத் தொன்பதிஞா யீரா தாகம் பெருநாமப் புகலூரிற் பதிகங் கூறிப் பிஞ்ஞகனார் அடியிணைகள் பெற்றுளாரே (15) இப்போது கிடைப்பவை 332 பதிகங்களே; அவற்றில் உள்ள பாடல்கள் 3066. இவற்றில் முதல் திருமுறையில் உள்ளவை 113 பதிகங்கள். முதல் 21 பதிகங்கள் பலவேறு பண்களில் அமைந் தவை. அப் பண்கள் கொல்லி (பதிகம். 1), காந்தாரம் (2.7). பியந் தைக்காந்தாரம் (8), சாதாரி (9), காந்தாரபஞ்சமம் (10-11), பழந் தக்க ராகம் (12-13), பழம்பஞ்சுரம் (14-15), இந்தளம் (16-18), சீகாமரம் (19-20), குறிஞ்சி (21) என்ற பத்து மாகும். இவற்றிற்குப்பின் ஐம்பத்தெட்டுப் பதிகங்கள் திருநேரிசைகள். திருநேரிசை என்பது பண்ணின் பெயர் அன்று; யாப்பின் பெயர். அவற்றிற்கு உரிய பண் கொல்லி. திருநேரிசை எனக் குறித்த செய்யுட்கள் பிற்காலத்தில் அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தமென்ற பெயரோடு வழங்கும் பாவினமாக துள்ளன. திருநேரிசைக்குப் பின் திருவிருத்தத்தாலான 34 பதி நங்கள் இருக்கின்றன. திருவிருத்தமென்பது கட்டளைக் கலித் துறையென்று வழங்கும் யாப்பு; அவை ஐஞ்சீர்களால் துமைந்தவை. அமைந் தேவாரத்தில் திருநாவுக்கரசர் வாக்குக்குத் தனியே ஒரு தன்மை உண்டு. கவி கவிஞனுடைய இயல்பையும் புலப்படுத்தும் இயல்புடையது. உலக வாழ்வில் பலவகை அல்லல்களுக்கு உட் பட்டவராதலின் இவருடைய பாட்டில் மனத்தை நெகிழவைக்கும் பகுதி மிகுதி. இவர் பாட்டைப் படித்தால் நால்வரில் மற்ற மூவருடைய பாட்டைவிட அவை தெளிவாக விளங்குவதைக் காண லாம். அதற்குக் காரணம் மற்றவர்களைவிட இவர் சிறந்த கவிஞர் என்பது அல்ல. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையிலே சிறந் தோரே. ஆயினும் திருநாவுக்கரசர் நம்மைச் சேர்ந்த ஒருவரைப் போல நமக்குத் தோன்றுகிறார். நாம் படும் துன்பங்களை இவரும் அடைந்தாரென்று தெரிகிறது. நம்மைப் போலவே ஆசையும் துடிப்பும் மயக்கமும் தெளிவும் உடையவராக நின்று பேசுகிறார். இவருடைய பேச்சு நமக்கு நன்றாக விளங்குகிறது; இவருடைய
பக்கம்:இரவும் பகலும்.pdf/5
Appearance