முன்னுரை திருநாவுக்கரசர் தேவாரம் நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளாக வகுக்கப்பெற்றிருக்கின்றன. இறைவனுடைய திருவருளைப் பெற அவன்பால் அன்பு செய்த நால்வரையும் நான்கு நெறி பற்றி வழிபட்டதாகச் சொல்வர். திருஞான சம் பந்தர் இறைவனைத் தந்தையாக அணுகிப் பிள்ளைபோல அன்பு செய்தார் என்றும், அந்நெறி சற்புத்திர மார்க்கமென்றும் கூறுவர். ஆண்டானை அடிமை வழிபடும் நெறியில் அப்பர் ஒழு கினார்; அது தாச மார்க்கம் ஆகும். தோழமை வழிபற்றியவர் சுந்தரர்; அது சகமார்க்கம். தலைவனை நாடும் தலைவி போன்ற நிலையுடையவர் மாணிக்கவாசகர் : அதனைச் சன்மார்க்கம் என்பர். உழவாரத் திருப்பணி செய்து வாழ்ந்த அப்பர் சுவாமிகள், திருநாவுக்கரசர் என்று இறைவன் அருளிய சிறப்புப் பெயருக்கு ஏற்ப அற்புதமான தேவாரப் பதிகங்களைப் பாடினார். உள்ளத்தே இறைவன் திருவடியை யன்றிப் பிறிது ஒன்றை எண்ணாமல் வாழ்ந் தார். இப்படி முக்கரணங்களாலும் வழிபாடு இயற்றிய பெரு மையை யுடைய வாகீசர் 4900 திருப்பதிகங்கள் பாடியதாகக் கூறுவர் சுந்தரமூர்த்தி நாயனார்; இணைகொள் ஏழெழு நூறிரும் பனுவல் ஈன்றவன் திரு நாவினுக் கரையன்" என்று திரு நின்றியூர்த் தேவாரத்தில் குறிப்பிடுகிறார். திருமுறை கண்ட புராணத்தில், பதிகம் ஒன்றுக்குப் பத்துப் பாட்டென்ற கணக்கு வைத்து, நாற்பத்தொன்பதினுயிரம் பாடல்களையுடைய பதிகங்கள் பாடியதாக அதன் ஆசிரியர் கூறுகிறார். 6 "திருநாவுக் கரையரெனும் செம்மை யாளர் தீஅமணர் சிறைநீங்க அதிகை மேவும் குருநசமப் பரஞ்சுடரைப் பரவிச் சூலைக் 'கொடுங்கூற்றாயின என்ன எடுத்துக் கேரதில்
பக்கம்:இரவும் பகலும்.pdf/4
Appearance