உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii 44 குணமிலா ஐவர் செய்யும் பாவமே தீர நின்றார்" (36:2) என்பவற்றிற் காணலாம். பொள்ளவிக் காயத் தன்னுள் புண்டர் கத்திருந்த வளளனை." (42:6} என்னும் பகுதி. "மலர்மிசை ஏகினான் என்ற திருக்குறட் பகுதிக்கு உரைபோல இருக்கிறது. இந்தப் புத்தகத்தில் பதின்மூன்று பாடல்களுக்குரிய விளக் கத்தைக் காணலாம். முதல் பாட்டும் இறுதிப் பாட்டும் அப்பர் சுவாமிகளுடைய வரலாற்றோடு தொடர்புடையவை. சூலை நோயைத் தவிர்த்தருள வேண்டுமென்று பாடியது, "கூற்றாயின வாறு' எனத் தொடங்கும் திருப்பதிகம். தமக்குத் திருவடி தீட்சை செய்தருள வேண்டுமென்று கேட்டுக்கொண்டு பாடியது, திருச்சத்தி முற்றத் திருப்பதிகம். திருவதிகையைப் பற்றிய பாடல்கள் மூன்றும், திருவையாற்றுப் பாடல்கள மூன்றும்,திருவாரூரைப் பற்றிய பாடல்கள இரண்டும்,திருக்கடவூர்,திருமறைக்காடு, திருவீழிமிழலை, திருச்சத்திமுற்றம் என்னும் தலங்களைப் பற்றிய பாடல் ஒவ்வொன்றும், பொது ஒன்றுமாகப் பதின்மூன்று பாடல் களை எடுத்து விளக்கம் செய்திருக்கிறேன். இறைவன் திருநாவுக்கரசரை ஆட்கொண்டதற்கு மூல காரணம், அவர் சமணரானாலும் பரம்பரை வாசனையினால் தம்மை யும் அறியாமல் அவருள்ளத்தே சிவபிரானுடைய நினைவு இருந்தது தான் என்பதை முதற் கட்டுரையில் அவர் வாக்கைக் கொண்டே காட்டியிருக்கிறேன். இந்தக் கட்டுரைகளை எழுதும்போதெல்லாம் என்னுடைய குறைபாடு எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. தமிழ் அறிவு மாத்திரம் இருந்தால் போதாது, இத்தகைய பாடல்களின் சுவையை உணர; சமய நூல்களிற் புலமை இருந்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/8&oldid=1726747" இலிருந்து மீள்விக்கப்பட்டது