உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii போதாது; இறைவனுடைய திருவடியிலே அன்பும் அதனால் பெற்ற அநுபவமும் இருந்தாலன்றி இத்தகைய அருளுணர்ச்சி ததும்பும் திருவாக்குகளிற் புதைந்து கிடக்கும் நலங்களைத் தெளிவாக உணர்தல் அரிது. ஆயினும் அன்பர்கள் பலர் இந்தக் குறை நிரம்பிய விளக்கங்களையும் தம்முடைய பெருந்தன்மையினாற் பாராட்டுகிறார்கள் என்பதை உணரும்போது, மேலும் எழுதலாம் என்ற ஊக்கம் உண்டாகிறது. தமிழ் நாட்டில் உள்ள அன்பர் களும் பத்திரிகைகளும் இந்த நூல் வரிசையைப் பாராட்டி எழுது வது கண்டு ஆக்கம் பெறுகிறேன். அணிமையில் இலங்கைக்குச் சென்றிருந்தபோது அங்குள்ள அன்பர்கள் இவ்விளக்கங்களை நன்றாகப் படித்துப் பாராட்டி என்பாலுள்ள பேரன்பைப் புலப் படுத்தினார்கள். எல்லாம் முருகன் திருவருள் என்று எண்ணி அப் பெருமானை வாழ்த்துகிறேன். பல வகையில் எனக்கு ஊக்கம் அளிக்கும் அன்பர்கள் அனைவர் திறத்திலும் மிக்க நன்றி பாராட்டுகிறேன். மயிலாப்பூர் 7-12-53 } . . கி.வா.ஜகந்நாதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/9&oldid=1726748" இலிருந்து மீள்விக்கப்பட்டது