உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பனைக் காட்சி 31 இறைவன் எல்லோரையும்போல மணிகளாலும் பொன்னாலும் ஆகிய அணிகளை அணியவில்லை. பிறர் கண்டால் அஞ்சும் என்பையும் பாம்பையும் அணிந்திருக் கிறான். அவன் திருக்கையில் இருப்பதோ கபாலம்; அதனை நகுதலை என்று சொல்வார்கள். மகளிருக்கு எளிதில் ஒன்றைக் கண்டு அஞ்சுவது இயல்பு. பாம்பென்றால் படை யும் நடுங்குமானால் ஒரு பெண் அஞ்சுவதைச் சொல்லவும் வேண்டுமோ? இறைவன் திருமுடியில் அணிந்த பாம்பு மெல்லத் தலை நீட்டியது. அவன் திருமுடியிலே அது சும்மா கிடந்தால் அதைக் கண்டு அச்சம் உண்டாகாது. அது அசைந்தது; படம் எடுத்து ஆடியது.அதைக் கண்ட வுடன் எம்பெருமான் முடியில் இருந்த கங்கையாகிய அரிவை அஞ்சினாள்; பேதுற்றாள்; சற்றே நகர்ந்தாள். . கங்கையின் உருவத்தைப் பாம்பு பார்த்தது. அவள் தன்னைக் கண்டு அஞ்சி நகர்ந்ததை அது உணரவில்லை. இப் போது அதற்கு அச்சம் எழுந்தது. அவள் கூந்தலும் அசைவும் கண்டு மயில் என்று எண்ணிவிட்டது. பாம்புக்கு மயில் பகையல்லவா? ஆகவே அரிவை பேதுற்று நகர்ந்த போது அது அஞ்சியது; மயிலென்றெண்ணி ஐயுற்று அஞ்சியது. பாம்பு ஐயுற்று நடுங்கித் துள்ளவே அதனைக் கண்டது, இறைவன் திருமுடியிலே உள்ள பிறை.சந்திர னுக்கும் பாம்புக்கும் பகை. ஆதலின் நீர் கிடக்கும் சடை மிசை இருந்த திங்கள், "பாம்பு இப்படித் துள்ளுகிறதே ! நம்மைத் தீண்டுமோ!" என்று ஏங்கியது. இந்த மூன்று நிகழ்ச்சிகளையும் பார்த்தால் யாருக்கும் சிரிப்பு வரும் அல்லவா? இறைவன் கையில் இருக்கும் கபாலம் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இயற்கையாகவே அது அப்படி இருந்தாலும், இப்போது மேலே சொன்ன காட்சி களைக் கண்டு சிரிப்பதுபோல இருந்தது. குழந்தைகள் எதையாவது பார்த்துக் காரணமின்றி அஞ்சி நடுங்குவதைக் கண்டு சிலர் நகைப்பதுண்டு. இறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/40&oldid=1726780" இலிருந்து மீள்விக்கப்பட்டது