உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பனைக் காட்சி சிவபெருமானுடைய திருமேனியிலே பொருந்திக் கிடக்கும் பொருள்கள் பல. அவற்றை நினைக்கும்போது அன்பர்களுக்குச் சில கற்பனைக் காட்சிகளும் தோன்றுவ துண்டு. திருநாவுக்கரசர் இப்படிக் காட்டும் கற்பனை நிகழ்ச்சிகள் பல. புலவர்கள் தாம் இயற்றும் காவியங்களில் கற்பனைக் காட்சிகளைப் புனைந்து கூறுவது வழக்கம். குறிஞ்சி முதலிய திணை வருணனைகளை அமைக்கும்போது அங்குள்ள பொருள்களைக் கொண்டு சில நிகழ்ச்சிகளைக் கற்பனை செய்து காட்டுவார்கள். திருநாவுக்கரசர் தம் பெயருக்கு ஏற்ப நாவன்மை உடையவர். அவர் தம் புலமை முழுவதை யும் இறைவனுக்கே அர்ப்பணம் செய்தவர். அவருடைய கருத்தும் கனவும், கற்பனையும் விற்பனமும் இறைவனைப் பற்றியே அமைந்திருக்கும். இறைவனைப் பல படியாகப் பாடித் துதித்த பாவாணர் அவர். இறைவனுடைய திருக் கோல வருணனையையும், அவனுடைய திருவிளையாடற் சிறப்பையும், அவனுடைய அருளின் உயர்வையும், அவ னுடைய ஆற்றலின் மிகுதியையும் எடுத்து உரைப்பார். தாம் நெறி மாறி நடந்தபோது தம்மைத் தடுத்து ஆட் கொண்டதையும்,இறைவனருளால் தாம் பெற்ற இன்ப நலத்தையும் கூறுவார். மக்களை நோக்கி,இன்னவாறு அவனைப் பணிந்து ஒழுகவேண்டும் என்று அறிவுறுத்து வார். கற்பனையால் இறைவன்பால் நிகழ்வனவாகச் சில நிகழ்ச்சிகளைப் புனைந்து கூறுவார். அத்தகைய கற்பனை களில் ஒன்று வருமாறு :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/39&oldid=1726779" இலிருந்து மீள்விக்கப்பட்டது