உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயாறன் அடித்தலம் 75 இறைவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். அவ னுடைய திருவடிகளும் அப்படியே தோற்றமும் முடிவும் இல்லாதன.ஆனால் தாமே எல்லாப் பொருட்கும் தோற்ற மும் ஈறுமாய் நிற்பவை. மக்கள் எடுக்கும் உடம்புக்குத் தோற்றம் உண்டு; இறப்பு உண்டு. பிறவா யாக்கைப் பெரியோனாகிய இறைவன் அடிமலர்களுக்கு அவ்விரண்டும் இல்லை. எழுவாய் இறுவாய் இலாதன. (தோற்றமும் முடிவும் இல்லாதன. எழுவாய் - தோற்றம். இறுவாய் - முடிவு.] மக்களுக்கு வரும் நோய் அளவற்றவை. அந்த நோய் களால் அவர்கள் படும் துன்பங்களும் அளவற்றவை. நோய்கள் யாவும் உடம்பினால் வருபவை. மனநோய் என்று சில நோய்களை வகுத்திருக்கிறார்கள். அவையும் உடம்பிலே துன்பத்தை ஏற்றுபவை. இந்த நோய்களைத் தீர்ப்பதற் குரிய மருத்துவமுறைகள் இருக்கின்றன. தீராத நோய்கள் என்று சிலவற்றைச் சொல்வதுண்டு. அவைகூட உடம்பு அழிந்தால் உடம்போடு போய்விடும். ஆனால் உண்மை யிலே தீராத நோய்கள் இரண்டு உண்டு. உள்ளத்தையும் உடலையும் பற்றிய நோய்களைப் போன்றவை அல்ல அவை; உயிரையே பற்றியவை. இறப்பென்றும் பிறப்பென்றும் சொல்லப்பெறுவனவே அந்த நோய்கள். பிறப்பென்னும் நோயால் வருவது உடம்பு; அந்த உடம்புக்கே இந்த நோய் கள் வருகின்றன. உடம்பாகிய நிலைக்களம் போய்விட்டால் நோய்களுக்கு இடமே இராது. ஓர் உடம்பு அகன்றால் அதனோடு தொடர்புடைய நோய்கள் போய்விடும். ஆனால் மற்றோர் உடம்பு வந்துவிடுகிறது. ஓர் உடம்பை விட்டு உயிர் செல்வதை இறப்பென்றும், வேறு ஓர் உடம்பிற் புகுவதைப் பிறப்பென்றும் சொல்கிறோம். இவ்விரண்டும் உடம்பை விட்டு உடம்பு புகும் உயிருக்கு அமைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/84&oldid=1726828" இலிருந்து மீள்விக்கப்பட்டது