உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயாறன் அடித்தலம் அன்பர்களுக்கு இறைவனுடைய திருவடியிலே காதல் மிகுதி. அதைக் கண்டு களிப்பதும் அதன்கண் வீழ்ந்து பணிவதும் அதற்கு அருச்சனை புரிவதும் அதன் புகழே பாடுவதும் அவர்களுக்கு இயல்பு. மக்களுக்குப் பற்றுக் கோடாக இருப்பது அடியேயாதலின் வள்ளுவரும் கடவுள் வணக்கத்தில் அவ்வடியைப் பற்றியே பெரும்பாலும் சொன்னார். திருநாவுக்கரசு நாயனார் திருவையாற்றில் எழுந்தருளியுள்ள இறைவனது திருவடியைப் பாடத் தொடங்கினார். ஒவ்வொரு. திருப்பதிகத்திலும் பத்து அல்லது பதினொரு பாடல்கள் அமைந்திருப்பது வழக்கம். ஆனால் ஐயாறன் அடித்தலத்தைப் பாடத் தொடங்கிய அப்பர் இந்த வரையறையையே மறந்தார். பத்துப் பாட்டுக்கு மேலும் பாடிக் கொண்டே போனார். பதினொன்று, பன்னி ரண்டு, பதின்மூன்று என்று பதிகம் வளர்ந்துகொண்டே போயிற்று. இருபதாவது பாட்டில் வந்து நின்றது. இந்த இருபது பாடல்களும் மிகவும் அற்புதமானவை. க் காரியாலயத்திலே நெடுநேரம் வேலைசெய்த ஒருவனு குத் தன் வீட்டுக்குப் போகவேண்டும் என்ற ஆசை உண்டாகிறது. வீட்டுக்கு வருகிறான். இளைப்பாற எண் ணும் அவன் அதற்குரிய அறைக்குச் செல்கிறான். அங்கே போனால் அவனை அறியாமலே தூக்கம் வருகிறது. அப்படி உலக நினைவிலிருந்து விலகி இறைவனுடைய திருக்கோல நினைவிலும் திருவருள் நினைவிலும் இன்பம் காணுகிற வர்கள் அன்பர்கள். அவற்றுள்ளே திருவடி நினைவிலே எல்லாவற்றையும் மறந்து இன்பத் துயில் புரிவது அவர் களுக்கு இயல்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/83&oldid=1726827" இலிருந்து மீள்விக்கப்பட்டது