உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறந்த கோயில் 73 துணையும் இல்லை; நகங்கள யாவும் தேயும்படியாகக் கையினால் அன்றலர்ந்த மலர்களைத் தூவி, முகமுழுவதும் கண்ணீர் பரவ இறைவன் திருமுன் வீழ்ந்து பணிந்து வாயார அவன் புகழ் பாடித் துதிக்கும் தொண்டர்களின் உள்ளமன்றி வேறு சிறந்த கோயில் இல்லை. சகம் - நிலவுலகம்; தோன்றுதலும் அழிதலும் உடைமை யால் இப் பெயர் பெற்றது. அடிமை - தொண்டு செய்யும் தன்மை; இங்கே அதனை உடையாருக்கு ஆயிற்று. தாள் - திருவடி. நகம் கைநகம். நாள்மலர் - அன்றலர்ந்த மலர். கையால் மலர் என்றாரேனும் தேய என்று சொன்னமையால் மலரைக் கொய்து தூவி என்று குறிப்பாற் பெற வைத்தார். மல்க - நிரம்ப. அகம்- உள்ளம். தூவி அடிமை,துணை, கோயில் என்பன அவ்வினங்களிற் சிறந்த வற்றைச் சுட்டி நின்றன. தேவர் முதலிய ஏவலர் இருப்பினும் பூவுலகத்து மக்களே சிறந்த அடியார் ; சுற்றத்தார், நண்பர் ஆகிய துணை இருப்பினும் இறைவன் தாளே சிறந்த துணை; ஆலயங்கள் இருப்பினும் தொண்டருடைய அகமே சிறந்த கோயில் என்பது கருத்து, சகம் அலாது என்பதனால் பிற உலகங்கள் இருத்தலையும் அவற்றுள் நிலவுலகம் சிறந்து நிற்பதையும் உணர்கிறோம். ஐயாறனார் என்பதனால் அந்தச் சகத்தில் இறைவனுக்குச் சிறந் தவை திருத்தலங்கள் என்பது புலப்படுகிறது. தொழுது தூவி என்றமையால் அப்பூசை நிகழும் இல்லம் இறைவனுக்கு உகந்தது என்று குறிப்பிடுகிறார். அவை யாவற்றிலும் உயர்நிலையாகத் திகழ்வது தொண்டர் அகம் என்றார்.] இப்பாசுரம், 40-ஆவது திருப்பதிகத்தில் எட்டாவது திருப்பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/82&oldid=1726826" இலிருந்து மீள்விக்கப்பட்டது