72 இரவும் பகலும் மற்ற எல்லாவற்றிலும் உயர்ந்ததாக நிலவுகிறது. அவன் உறையும் கருப்பக்கிருகம் அது என்றே சொல்லிவிடலாம். பிரபஞ்சம் முழுவதும் அவன் ஊர்; நிலவுலகம் அவன் தன் அன்பர்களுடன் தங்கும் வீடு; கோயில்கள் அவனுக்குரிய அறை; பூசையிடம் அவ்வறையில் அவன் அமரும் சூழல்; அன்பர் உள்ளம் அவன் திருமேனி படிய அமரும் ஆதனம்; இளைப்பாறத் தங்கும் பாயல்; ஆட்சிபீடமாகக் கொண்ட சிங்காதனம்; அருள் முழுவதையும் வஞ்சகமின்றி வெளிப் படுத்தும் இடம். நம்மை ஆளுடைய ஐயன் எல்லா அண்டங்களிலும் இருக்கிறான்; தன் அருளாணையினாலே அவற்றைப் புரக் கிறான். ஆனாலும் அவன் இருக்கும் நாடு பூவுலகம்; அவ னுடைய இராசதானி ஐயாறு; அவனுடைய அரண்மனை அடியார் வாழும் இல்லம்; அவனுடைய சிங்காதனம் தொண்டருடைய உள்ளம்.- இப்படியும் கொள்ளலாம். அப்பர் சுவாமிகள் அருளிய வாக்கு இந்த வகையிலே நம் முடைய கற்பனையை விரிக்க இடம் கொடுக்கிறது. சகம் அலாது அடிமை இல்லை; தாள் அலால் துணையும் இல்லை; நகம்எலாம் தேயக் கையால் நாள்மலர் தொழுது தூவி முகம்எலாம் கண்ணீர் மல்க முன்பணிந்து ஏத்தும் தொண்டர் அகம் அலால் கோயில் இல்லை; ஐயன்ஐ யாற னார்க்கே. (எங்களை ஆண்டருளும் கடவுளாகிய திருவையாற்றுப் பெருமானுக்குச் சகத்தில் உள்ளார் அல்லாமல் சிறந்த அடிமை செய்வார் இல்லை; அவர்களுக்கு அவன் தாளையன்றிச் சிறந்த
பக்கம்:இரவும் பகலும்.pdf/81
Appearance