சிறந்த கோயில் 71 இப்போது காண்கிறோம். மலரைக் கொய்வதிலும், அதனைத் தூவிப் பூசிப்பதிலும் அவரது அன்பு தோன்றி னாலும், முகமெலாம் கண்ணீர் மல்க நிற்கும்போதுதான். 'அது புறத்திலேமட்டும் அமையும் போலியன்பன்று; உள்ளங்கசிந்து வரும் உண்மையன்பு'என்பது புலனாகிறது. அவர் வாழும் ஊரிலே திருக்கோயில் உண்டு. அங்கே இறைவன் எழுந்தருளியிருக்கிறான். அவர் வசிக்கும் வீட் டிலே அவர் வழிபடும் பூசையிடம் உண்டு. அங்கும் அவ ருடைய ஆன்மார்த்த மூர்த்தியாக எழுந்தருளி யிருக்கிறான். இந்த இரண்டிடங்களுக்கும் அவர் சென்று வழிபடுகிறார். யாருங் காண நாட்டுக் கோயிலிலும் வீட்டுப் பூசையிலும் இறைவன் இலங்குவது பெரிதல்ல. மற்றவர்கள் கண்ணுக் குத் தெரியும் காட்சிகள் இவை. ஆனால் பிறர் கண்ணுக் குப் புலனாகாமல் இறைவன் உறையும் திருத்தலம் ஒன்று இருக்கிறது. அந்த இடந்தான் இறைவன் தானே விரும்பி மேற்கொள்வது. அதுதொண்டருடைய உள்ளக் கோயில். அண்டங்கள் அனைத்தும் அவன் ஆணையின்படி நடப்பன; ஆயினும் அவனுடைய அடியார்கள் வாழும் இடம் இந்த நிலவுலகம். இங்கே இறைவன் பல திருக் கோயில்களில் எழுந்தருளியிருக்கிறான். பிற உலகங்களை விட நிலவுலகத்திலே அவன் அருள் சிறப்பாகப் படர் கிறது. இந்த நிலவுலகத்தில் திருக்கோயில்களில் யாரும் வணங்கும்படி எழுந்தருளி யிருக்கிறான். அடியார்களின் இல்லங்களிலும் பூசித்து வழிபடும்மூர்த்தியாக இருக்கிறான். அவற்றைக்காட்டிலும் சிறப்பாகத் தொண்டர்களின் அகத்தில் வீற்றிருக்கிறான். ஏனைய உலகங்களுக்கிடையே பூவுலகம் அவனுடைய திருக்கோயிலாக இருக்கிறது. பூவுலகத்திலும் ஆலயங்கள் அவனுக்குச் சிறந்த இருப்பிடமாக உள்ளன. ஆலயங்களி னும் ஆன்மார்த்த பூசை புரியும் இல்லங்கள் சிறந்த கோயில் களாகத் திகழ்கின்றன. அன்பருடைய அகக்கோயிலோ, .
பக்கம்:இரவும் பகலும்.pdf/80
Appearance