70 இரவும் பகலும் அடையாளம். ஆனால் அவற்றிற்கும் மேலாக ஓர் அறிகுறி உண்டு. அதுதான் அன்புக்கு உண்மையான அடையாளம். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் என்னும் அருமைத் திருக்குறளில் வள்ளுவர் அன்பை வெளிப்படுத்தும் அடையாளம் கண்ணீர் என்று சொல் கிறார். இறைவனிடம் அன்பு முதிர்ந்தவர்களுக்கு உள்ளம் கசியும்; முகம் மலரும் : கண்ணீர் பெருகும். "உடம்பெல்லாம் கண்ணாய் அண்ணா வெள்ளந்தான் பாயாதால்" என்ற மணிவாசகர் வாக்கில் இந்த அன்பின் அறிகுறியைச் சொல்கிறார். இந்த அடியார் நகமெலாந் தேய மலர் பறித்து இறை வனைப் பூசிக்கும்போது, உள்ளே உள்ள அன்புக் கடல் பொங்குகிறது; பொங்கி வழிகிறது. அவர் கண்களில் நீரூற்றுப் பெருகுகிறது. முகமெலரம் அந்தக் கண்ணீர் மல்கு கிறது. இறைவன் திருமுன் வீழ்ந்து பணிந்து கதறிப் பாடி யாடுகிறார், இத்தனை மலர்களைப் பறித்துத் தூவியும், 'நான் ஒன்றும் செய்திலேனே!" என்று வேசாறிப் புலம்பி நைகிறார்; விம்முகிறார். இறைவனை நறுநீரால் ஆட்டிப் பூசைபுரியும் அவருடைய திருமேனியும் அன்புக் கண்ணீரில் ஆடுகிறது. இறைவனுக்கு மாலையிட்டு வழிபடும் அவர் மேனியிலே கண்ணீர் மாலை மாலையாகச் சோர்கிறது. கைநகம் தேயத் தம் அன்பைச் செயலிலே காட்டு கிறது பெரிதன்று. யாரேனும் பொருள் தருவதாக இருந் தால் கைமுழுவதும் தேயும் வரையில் மலர் பறிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆதலின் அந்தச் செயலை மாத்திரம் கொண்டு அவருடைய அன்பை அளக்கக்கூடாது. ளத்தே உள்ள அன்புக்கு உண்மையான அடையாளத்தை உள்
பக்கம்:இரவும் பகலும்.pdf/79
Appearance