சிறந்த கோயில் 69 டிருக்கிறார். அதனால் அவர் நகங்கள் தேய்ந்தன. எறும்பூரக் கல் குழியும் என்பார்கள். மலர் பறித்துப் பறித்து நகங்கள் தேய்ந்தன என்றால், அவர் பறிக்கும் மலர்களின் பேரளவை ஒருவாறு கற்பனை செய்து பார்க்கலாம். நகமெலாம் தேயும் படி கையினால் நாள்மலர்களைக் கொய்து வந்து இறை வனைப் பூசை செய்கிறார் அவர். மனிதனுக்கு மனிதன் உபசாரம் செய்வதானால் செய் பவனும் ஓர் எல்லைக்குள் நின்றுவிடுவான்; உபசாரத்தைப் பெறுகிறவனும் ஓர் அளவுக்குமேல் தாங்கமாட்டான். இறைவனுக்கு அப்படி இல்லை. எத்தனை மிகுதியாகப் பூசைக்குரிய பொருள்களைச் சேமித்துப் பூசை செய்தாலும், 'இனி இறைவன் தாங்கமாட்டான்' என்று சொல்லும் நிலை வராது. உள்ளங்கை நீரும் பச்சிலையும் இட்டுப் பூசித் தாலும் ஏற்கிறான். உலகில் உள்ள ஆறுகளையெல்லாம் கொணர்ந்து ஆட்டி,மலர்களை யெல்லாம் தொகுத்து அருச் சித்தாலும் ஏற்றுக்கொள்வான். அவரவர்களுடைய அன்பு நிலைக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற வகையில் பூசையின் விரிவு அமைந்திருக்கும். இங்கே இந்த அன்பருடைய அன்பு விரிந்து பரந்தது, இறைவன் உலகிலே படைத்திருக்கும் மலர்மரங்களும் செடிகொடிகளும் பல பல. மலைமலையாகப் பூவை தொகுத்து இறைவனுக்குப் பூசை செய்யவேண்டும் என்பது அவர் ஆசை. அன்பில்லாதவர்களுக்குப் பத்துப் பூப் பறித் தாலே சலித்துவிடும். அன்புடையவர்களுக்கு அப்படிச் சலிப்பு ஏற்படாது. அவர் பறித்துக் கொண்டே இருப்பார். இவ்வாறு நகமெல்லாம் தேயக் கையால் மலரைப் பறித்து இறைவனுக்குப் பூசை செய்யத் தொடங்குகிறார். அவர். அவனைத் தொழுது, அவன் திருநாமங்களைக் கூறி, மலர் தூவி அருச்சிக்கிறார். அவருடைய அன்புக்கு அவர் மலர் பறிப்பது அடையாளம்; அவர் கைநகம் தேய்ந்தது
பக்கம்:இரவும் பகலும்.pdf/78
Appearance