68 இரவும் பகலும் தமக்கு எக் காலத்திலும் எவ்விடத்திலும் துணையாக நிற்பன எம்பெருமானுடைய திருவடிகளே என்று பற்றிக் கிடப்பது சகத்தில் உள்ள அடியார்களின் இயல்பு. சகத்தை அடிமையாகக் கொண்டான் இறைவன்; அச் சகத்தில் உள்ளோர் அவன் திருவடிகளைப் பற்றுக் கோடா கப்பற்றி வாழ்கிறார்கள். சகமலாது அடிமை இல்லை; தாள் அலால் துணையும் இல்லை. அதோ போகிறாரே அவர் ஒரு பக்தர். மெய்யடியார் நிலவு லகவாசிதான். இறைவன் தாளே என்றும் துணை என்று வாழ்கிறவர் அவர். இறைவனுக்கும் அவன் அடி யார்களுக்கும் தொண்டு செய்வதையே தம் வாழ்க்கைப் பெரும்பயனாகக் கருதும் தொண்டர் அவர். காலையில் எழுந்து நீராடுவார். அப்பால் நந்தனவனம் செல்வார். அங்குள்ள மலர்களை நின்று நிதானமாகக் கொய்வார். மலர்களெல்லாம் அப்போதுதான் மலர்ந்து கொண்டிருக்கும். விடியற்காலையிலே மலரும் பருவத்தில் அவற்றைப் பறிப்பார். இந்தத் தொண்டை அவர் பல காலமாகச் செய்துவருகிறார். உண்பதை மறந்தாலும் மலர் கொய்யும் திருத்தொண்டை மறந்தறியார். அவருடைய விரல்களைப் பார்த்தால் அவர் செய்துவரும் தொண்டின் அடையாளம் இருக்கும். அது மலர் மணம் வீசும். அது மட்டுமல்ல; இறைவனுடைய இறைவனுடைய திருவடித் தொண்டிலே ஈடுபடுபவருக்கு மெல்ல மெல்லத் தீவினை தேய்வதுபோல, மலர் கொய்து கொய்து அவருடைய கைநகங்கள் தேய்ந்து விட்டன. மெல்லிய மலராதலின் பலமுறை கொய்தாலும் எளிதில் நகம் தேயாது; நகம் வலியது. இந்த அடியாரோ கணக்கு வழக்கின்றி மலர் கொய்யும் வேலையில் ஈடுபட்
பக்கம்:இரவும் பகலும்.pdf/77
Appearance