உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறந்த கோயில் 67 இறைவனுக்கு அன்பு செய்து, இருவினையொப்பு, மல்பரி பாகம், சத்திநிபாதம் ஆகிய கைவரப் பெற்று, அவனரு ளால் ஞானமடைந்து முத்தியின்பத்தை அடையவேண்டும் என்று சமய நூல்கள் சொல்லுகின்றன. ஆதலின் இவ்வுலகத்திற்குத் தனிப் பெருமை இருக்கிறது. இறை வனைத் தேவரும் பூசிப்பது உண்டென்றாலும் தமக்கு அவனால் உண்டாகும் பயன் ஒன்றைக் கருதி வழிபடுவதை யன்றி அன்பினால் வரும் இன்பம் கருதி வழிபடுவதில்லை. உண்மையான அன்பர்களை நிலவுலகத்திலேதான் காண லாம். இறைவன் திருவுள்ளத்துக்கு உகந்தவர்கள் தேவர் கள் அல்ல; வேறு உலகங்களில் வாழ்வாரும் அல்ல; நில வுலகில் வாழும் மக்களே.அவனுடைய அடியார்கள் இந்தச் சகத்தில் வாழ்பவர்களே. இந்தச் சகமன்றி அவனுக்கு உண்மையான அடிமைத் தன்மையை உடையது வேறு இல்லை. சகமலாது அடிமை இல்லை. A சகத்தில் உள்ள அடியவர்களுக்கு இறைவனுடைய திருவடி ஒன்றே பற்றுக் கோடு. உண்மையான அன்பர் களை அடியார்கள் என்று சொல்கிறது பெருவழக்கு. இறைவனுடைய அடியைப் பற்றுக் கோடாகக் கொண் டிருப்பதுதான் அதற்குக் காரணம். இறைவன் திருமுன் அகந்தையொழிந்து பணிந்து நிற்கும் அடியார்களுக்கு அவ டைய உறுப்புக்களில் திருவடி ஒன்றே புலனாகும். அது அவர்களுடைய பிறவிப்பெருந்துயரைப் போக்கும் மருந்தா தலின் அதை விடாமற் பற்றுவார்கள். இறைவனைக் காட்டிலும் அவன் திருவடிகளே ஏற்றமுடையன என்று சொல்லும்படி அடியார்களின் திருவடிப்பற்று அமைந் திருக்கிறது. "நின்னிற் சிறந்தநின் திருவடியவை" என்பது பரிபாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/76&oldid=1726819" இலிருந்து மீள்விக்கப்பட்டது