உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

776 இரவும் பகலும் இரண்டு தீராத நோய்கள்; பெருநோய்கள். இவற்றிற் குரிய மருத்துவம் செய்பவர்கள் இவ்வுலகில் இல்லை. ஆங்கிலத்தில், "மருத்துவரே, உம்முடைய நோயை முதலில் தீர்த்துக் கொள்ளும்" என்று ஒரு பழமொழி வழங்கும். இறப்பும் பிறப்பும் ஆகிய இரண்டு பெரும்பிணி களையும் தீர்க்க மற்றப் பிணிகளைத் தீர்க்கும் மருத்துவர் களுக்கு ஆற்றல் இல்லை. அவர்களே அந்தப் பிணிகளுக்கு உட்பட்டு உழன்று துன்புறுகிறவர்கள். யார் அந்த நோய் களினின்றும் அகன்று நிற்கிறவரோ அவரே அவற்றுக் குரிய மருத்துவத்தைச் செய்யும் ஆற்றல் படைத்திருப்பார். ஐயாறன் அடித்தலம் அவ்விரண்டு பிணிகளுக்கும் அப்பாற் பட்டவை. ஆதலின் தம்மை அடைந்தாருக்கும் மிகக் கொடியனவாக அமைந்த இரண்டு பிணிகளையும் நீக்கிச் சிறிதும் தவறாத மருந்தாகத் திகழ்கின்றன. வெங்கட் பிணிதவிர்த்து வழுவா மருத்துவம் ஆவன. (கொடுமையான நோய்களைப் போக்கி, பயன் தருதலில் சிறிதும் தவறாத மருந்தாக இருப்பவை. வெங்கண் - கொடுமையையுடைய; பிணி - நோய்; இங்கே இறப்பையும் பிறப்பையும் குறித்தது. வழுவா - தவறாத. மருத்துவம் - வைத்தியம்: இது இங்கே மருந்தைக் குறிக்க நின் றது: ஆகுபெயர்.] - உடம்பை எடுப்பதும் விடுப்பதுமாகிய நோய்களுக்குக் காரணமாக இருப்பவை உயிர்கள் செய்யும் இருவினைகள். நல்வினை, தீவினை என்னும் அவ்விரண்டினாலும் உயிர்கள் மாறி மாறிப் பிறந்து வாழ்ந்து இறக்கின்றன. மிகவும் கொடிய தீவினைகள் செய்தால் இம்மை நீங்கின் நரகத்தில் அவ்வினைகளுக்குரிய தண்டனைகளைப் பெறுகின்றன.உயிர் களுக்குப் பருவுடம்பு என்றும் நுண்உடம்பு என்றும் இரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/85&oldid=1726829" இலிருந்து மீள்விக்கப்பட்டது