உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயாறன் அடித்தலம் 77 வகை உடம்புகள் உண்டு. பருவுடம்பை எடுத்து உலகத்தில் வாழ்வு நடத்துகின்றன. இறப்பும் பிறப்பும் இவ்வுடம் போடு தொடர்புடையன. நுண் உடம்புக்கும் நோய் உண்டு. நரகத்தில் துன்பமும்,சொர்க்கத்தில் இன்பமும் அடைவது. அந்தச் சூட்சும சரீரமே. தீவினைகளைச் செய்யும் உயிர்களைப் பெரிய நரகக் குழியிலே தள்ளும் காரியத்தை இறைவன் திருவடிகளே செய்கின்றன. ஆனால் அவற்றையே பற் றாகப் பற்றிக்கொண்டால் நரகக் குழியில் விழுந்த உயிர் களையும் அத் துன்பத்திலிருந்து மீட்கும் அருளை உடை யவை அவை. மாநர கக்குழிவாய் விழுவார் அவர்தம்மை வீழ்ப்பன ; மீட்பன. [பெரிய நரகமாகிய குழிகளில் வீழ்ந்து துன்புறுபவர்களாகிய அவர்களை அவற்றில் விழும்படி செய்வனவும் அவைகளே; அவற்றினின்றும் மீட்பனவும் அத் திருவடிகளே. வீழ்ப்பன-வீழச் செய்வன.) உள்ளத்திற்கும் உடம்புக்கும் உயிருக்கும் வரும் துன்பங்களைத் திருவடிகள் போக்கும். துன்பத்தைப் போக்குவதோடு நிற்பன அல்ல அவை; மேலும் இன்பத்தை உண்டாக்குபவை. மருத்துவன் நோயாளிக்கு மருந்துகளைக் கொடுத்து நோயை ஒழித்து விடுகிறான். நோய் நீங்கினாலும் அதனாற் பற்றப் பெற்றவன் மெலிவாக இருப்பான். அதன்பின் அவனுக்கு உடம்பு வன்மை அடையும் மருந்துகளைத் தந்து நன்கு உண்ணுதல்,உறங் குதல், பிற நுகர்ச்சி ஆகியவற்றால் இன்பம் அடையச் செய்வான். முன்னைய முறை துன்ப நீக்கம்; பின்னையது இன்ப ஆக்கம். திருவடிகள் உயிர்களுக்குச் செய்யும் மருத்துவமும் இப்படி இரண்டு நிலைகளை உடையன. வெங்கட் பிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/86&oldid=1726830" இலிருந்து மீள்விக்கப்பட்டது