78 இரவும் பகலும் தவிர்த்து, நரகக்குழியினின்றும் மீட்பதோடு, இன்பமும் அருளுகின்றன. அளவுக்கு அடங்காத அன்பை உடையவர் களுக்கு இனிமையாக இருக்கின்றன. அவ்வன்பர்கள் அன்பினால் அழுகிறார்கள். அழுகை அன்பின் மிகுதிக்கு அடையாளம். அவர்களுக்கு அமுதம்போல இனிப்பவை இறைவன் அடித்தலங்கள். .... மிக்க அன்போடு அழுவார்க்கு அமுதங்கள் காண்கஐ யாறன் அடித்தலமே. [மிகுதியான அன்போடு அழுபவர்களுக்கு அமுதங்களைப் போன்றவை, ஐயாறனுடைய அடிகளாகிய இடம்.) உயிரிலே இன்பம் பாய்ச்சுவன ஆகையால் அமுதம் என்றார். நீக்கி, எவ்வுயிர்க்கும் ஆதியாய் அந்தமாய் நின்று உயிர் களுக்கு வரும் தோற்றமும் இறுதியும் தமக்கு இல்லாதன வாய், உயிர்களிடத்தும் அந்த இரண்டையும் சூட்சும உடம்புக்கு வரும் துன்பமாகிய நரக வேதனையை யும் மாற்றி, என்றும் சாவாத இன்பத்தைத் தரும் பேரமுத மாக இலங்குவன, திருவையாற்றில் உள்ள எம்பிரா னுடைய திருவடிகள் என்று பாடி மகிழ்கிறார் அப்பர். எழுவாய் இறுவாய் இலாதன; வெங்கட்பிணிதவிர்த்து வழுவா மருத்துவம் ஆவன;மாநர கக்குழிவாய் விழுவார் அவர்தம்மை வீழ்ப்பன, மீட்பன ; மிக்க அன்போடு அழுவார்க் கமுதங்கள் காண்க,ஐ யாறன் அடித்தலமே, இது 92-ஆம் பதிகத்தில் ஐந்தாவதாக அமைந்த திருப் பாட்டு.
பக்கம்:இரவும் பகலும்.pdf/87
Appearance