உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுநலப் பிரியரும், அருகிய வூரில் இவர் முயன்று ஸ்தாபித்த பருத்தியறவைச்சாலை தற்காலம் பராதீனப்பட்டு நடப்பதன் சரிதமும், தொழிலபிவிருத்தி முதலிய நம்மவர் முன்னேற்ற முயற்சிகளால் இவர் கைப்பணமிழந்து வறுமையுற்று வருந்திய விருத்தாந்தங்களும் இக்கதைக்கு அவசியமற்றவை. இத்தகைய அருள், அறிவு, ஆற்றல் நிறைந்திருந்த ஸ்ரீசின்னஸாமி அய்யர் அவர்களின் முதன் மனைவியின் வயிற்றுதித்த ஒளரஸபுத்திரரே நம்வரகவி' '2 என்று நாவலர் சோமசுந்தரபாரதியார் எட்டயபுரம் சின்னசாமி அய்யரின் ஆலை குறித்து எழுதியுள்ள செய்திக்குள்ளே அடங்கியிருக்கும் விஷயம் தான் என்ன? பாரதியை அது எவ்வாறு பாதித்தது? ஆங்கிலேயர்களின் மேல் அளவிலா வெறுப்பை பாரதிக்கு எவ்வாறு அது ஏற்படுத்தியது? தேசபக்தியின் வித்து பாரதியின் தந்தையார்துவங்கிய காட்டன் ஜின்னிங் பாக்டரியின் தொழில் முயற்சி 20 ஆயிரம் ரூபாய் பங்குத்தொகையுடன் தொடங்கப் பட்டது. இதில் எட்டயபுரம் ஜமீன்தார் 50 பங்குகள் வாங்கியிருந்தார். இந்தத் தொழிற்சாலைக்கென மதுரை வரையிலும் வந்து சேர்ந்துவிட்ட சில எந்திர சாதனங்களை, மதுரையிலிருந்து எட்டயபுரத்துக்குக் கொண்டு செல்ல அன்றைய ஆங்கிலேயே அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.3 "சின்னச்சாமி அய்யர் தமது ஆலை முயற்சி தொடங்கிய காலத்தில் அவருக்குப் பணம் மற்றும் பிற வழிகளில் உதவமுன்வந்த எட்டயபுர மன்னரும், மற்றும் பணம் படைத்த நண்பர்களும், பின்னர் ஆங்கிலேயே அரசாங்க அதிகாரிகள் அளித்து வந்த நிர்ப்பந்தத்தின் காரணமாகத் தமது ஆதரவையும், உதவியையும் வாபஸ் வாங்கிக் கொண்டதாகவும், அதன் காரணமாக சின்னசாமி அய்யர் கைமுதலையும் இழந்து தொழில் முயற்சியிலும் தோற்று நசித்துப் போய்விட்டதாகவும், கட்டிய ஆலையை நடத்த முடியாமல் போய்விட்டதாகவும் இயந்திரங்களை கழற்றி விற்க நேர்ந்ததாகவும், அவர் கட்டிய ஆலை எட்டயபுரத்தில் இருந்து ஒரு மைல் தள்ளி மேற்குத் திசையில் எட்டயபுரத்துக்கும் பிதப்புரம் என்ற கிராமத்திற்கும் இடையே சிதிலமடைந்த பாழுங்கட்டிடமாக இன்றும் 2.நாவலர் சோமசுந்தரபாரதியார், ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் சரித்திரச்சுருக்கம், (1922) துன்மதி மார்கழி, தூத்துக்குடி, பக்கம், நு.ச. 3. பாரதியின் தம்பி சி.விசுவநாத அய்யர், தொ.மு.சி. ரகுநாதனிடம் நேரில் அளித்த தகவல். 6